சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை பெரும் தொகை கொடுத்து தட்டித்தூக்கிய முன்னணி நிறுவனம் - அதுவும் இத்தனை கோடியா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளது.

Suriya 42 movie audio rights bagged by saregama for whooping amount

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42. சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பேண்டஸி கதையம்சம் கொண்ட சரித்திர படமாக தயாராகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

நடிகர் சூர்யா இதுவரை நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படாமாக இது இருக்கும் என்றும் தயாரிப்பாளரே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி உள்பட 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். சூர்யா 42 படத்தின் தலைப்பு நாளை வெளியிடப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி... ‘ஆள விடுங்கடா சாமி’னு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தெறித்தோடிய ஸ்ருதிஹாசன்

Suriya 42 movie audio rights bagged by saregama for whooping amount

இதனிடையே சர்ப்ரைஸ் அப்டேட்டாக, சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது யார் என்கிற விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழு அதற்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

பெருந்தொகை கொடுத்து சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். ஆடியோ உரிமை மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யா படத்திற்கான ஆடியோ உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சேலத்தில் கலை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை நிக்கி கல்ராணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios