சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு காரணமானவர் முதல் சிலுக்கை பயன்படுத்திய நடிகர்கள் வரை.. லிஸ்ட் போட்டு சொன்ன பயில்வான்
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை பயன்படுத்திய நடிகர்களின் லிஸ்ட் ரொம்ப பெருசு என பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவையே தன் கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் சில்க் ஸ்மிதா. ஒருகாலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை பல்வேறு மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. குறிப்பாக அவர் 1996-ம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் அதற்கான உண்மைக் காரணம் என்ன என்பது தெரியாமல் மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து யூடியூப்பில் பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு அவரது கணவர் தான் காரணம். டாக்டரான அவர் அளவுக்கு அதிகமான போதை ஊசிகளை போட்டு அவரை போதைக்கு அடிமையாக்கிவிட்டார்.
சில்க் ஸ்மிதா சினிமாவுக்குள் வர நானும் ஒரு முக்கிய காரணம். நான் மாயா என்கிற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோது, சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி புகைப்படத்தை அதில் போடுவேன். அப்படி ஒருநாள் விணு சக்ரவர்த்தி நான் போட்டிருந்த சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி படத்தை பார்த்து யார் இந்த பொண்ணுனு கேட்டார். அதன்பின் நான் அவருக்கு சில்க் ஸ்மிதாவின் வீட்டு அட்ரஸை கொடுத்தேன். அதன்பின் தான் அவரை தனது வண்டிச்சக்கரம் என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் விணு சக்ரவர்த்தி.
இதையும் படியுங்கள்... சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை பெரும் தொகை கொடுத்து தட்டித்தூக்கிய முன்னணி நிறுவனம் - அதுவும் இத்தனை கோடியா?
இதனால் சில்க் ஸ்மிதா என்மீது நன்கு மரியாதை வைத்திருந்தார். எனக்கும் படங்களில் நடிக்க சான்ஸ் வாங்கி கொடுத்ததோடு, எனக்கு ஜோடியாகவும் நடித்தார். சில்க் ஸ்மிதா இயல்பாகவே ஒரு வெள்ளந்தியானவர். அவர் சம்பாதித்ததை அவரது சித்தியும், அத்தையும் அவரிடம் இருந்து அபகரித்துவிட்டார்கள். சில்க் ஸ்மிதாவின் கண்ணே கதை சொல்லும், அந்த அளவும் ஈர்ப்பு கொண்டவர்.
கவர்ச்சி நடிகையாக அறிமுகமானதால் ஆரம்பத்தில் கவர்ச்சி வேடங்களில் அதிகளவில் நடித்தார். ஆனால் அவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர். கதாநாயகிகள் 40 படத்தில் நடித்து சம்பாதிப்பதை சில்க் ஸ்மிதா 4 படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி சம்பாதித்து விடுவார். சினிமாவில் சில்க் ஸ்மிதாவை பயன்படுத்திய நடிகர்களின் லிஸ்ட் ரொம்ப பெருசு என கூறிய பயில்வான், அந்த நடிகர்களின் பெயரை வெளியிடவில்லை.
இதையும் படியுங்கள்... முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி... ‘ஆள விடுங்கடா சாமி’னு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தெறித்தோடிய ஸ்ருதிஹாசன்