MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!

கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!

தேர்தலுக்கு செலவு செய்ய விஜயிடம் ஓரளவுக்கு பணம் இருந்தாலும் திமுக -அதிமுகவுடன் போட்டி போட்டு தேர்தலை எதிர்கொள்கிற அளவுக்கு வெளிப்படையாக செலவு செய்கிற அளவுக்கு தவெகவிடம் பணம் இல்லை

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 04 2026, 10:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
என்.டி.எ கூட்டணியில் பாஜக?
Image Credit : Asianet News

என்.டி.எ கூட்டணியில் பாஜக?

தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில் தவெக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என பாஜகவில் பேச்சுக்கள் பரப்பராக ஓடிக்கொண்டு இருக்கிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்பாட்டில் பாஜகவின் திட்டங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திமுகவை தோற்கடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி பல வியூகங்களை வகுத்து வருகிறது டெல்லி பாஜக. எப்படியாவது விஜயை கூட்டணிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றது. ஆனால், தவெக, என்.டி.ஏ கூட்டணியில் இணைவதில்லை என்கிற முடிவில் திட்டவட்டமாக இருந்து வருகிறது.

24
அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்
Image Credit : Asianet News

அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என வெளிப்படையாகவே பலமுறை அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து விட்டனர். ஆனாலும், அமித் ஷா அடிக்கடி என்.டி.ஏ கூட்டணியை விஸ்தரிப்போம் எனக் கூறி வருகிறார். "கூட்டணி விரிவாக்கம் குறித்து தேர்தல் நெருங்கும்போது தெளிவாகும்" என்று அமித் ஷா கூறிவருகிறார்.

இப்போது வரை என்.டி.ஏ கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக அணிகள் இணைந்துள்ளன. ஆனால்,தொகுதி பங்கீடு இழுபறி நீடிக்கிறது. அதிமுக 140+, பாஜக 60+ என்ற சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் உறுதியாகவில்லை.

ஆனால் விஜய் தரப்பு தனித்து போட்டியிடுவது என்பதில் உறுதியாக உள்ளது. அமித் ஷா -அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை அடிக்கடி சந்தித்து தொகுதி பங்கீடு, வியூகம் வகுக்கிறார். அமித் ஷாவின் மாஸ்டர் பிளான் என்பது அதிமுக தலைமையில் வலுவான திமுகவுக்கு எதிரான அணி உருவாக்குவதே.

Related Articles

Related image1
எகிறிய ஸ்டாலின்... திமுகவினரை வைத்தே வழிக்குக் கொண்டு வந்த காங்கிரஸ்... பரபர பின்னணி..!
34
அரசியல் பிரவேசத்தால் விஜய் அப்சட்?
Image Credit : Asianet News

அரசியல் பிரவேசத்தால் விஜய் அப்சட்?

இந்நிலையில், தேர்தலுக்கு செலவு செய்ய விஜயிடம் ஓரளவுக்கு பணம் இருந்தாலும் திமுக -அதிமுகவுடன் போட்டி போட்டு தேர்தலை எதிர்கொள்கிற அளவுக்கு வெளிப்படையாக செலவு செய்கிற அளவுக்கு தவெகவிடம் பணம் இல்லை என்கிறார்கள். காரணம் மத்திய விசாரணை அமைப்புகள் மூலமாக தவெகவின் பொருளாதார பலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் விஜய் மனைவியின் விவாகரத்து, சிபிஐ வழக்கு, ஜனநாயகன் பட ரிலீஸ் என விஜய் தன் அரசியல் பிரவேசத்தில் ரொம்பவே அப்சட் ஆகியுள்ளார்.

44
தேர்தல் நெருக்கத்தில் மனம் மாறும் விஜய்
Image Credit : Asianet News

தேர்தல் நெருக்கத்தில் மனம் மாறும் விஜய்

இதனை பயன்படுத்தி விஜய்க்கு கணிசமான தொகுதிகளை கொடுப்பதாகவும், அதிமுகவுக்கு இணையான கட்சியாக தவெகவை கூட்டணியில் இடம் பெற செய்கிறோம் எனவும் சில பேர் மூலமாக சொல்லி அனுப்பி இருக்கிறார் அமித் ஷா. விஜயிடம் இருந்து சாதகமான பதில் வராத நிலையில் தேர்தல் நெருக்கத்தில் விஜய் மனசு மாறுவார் என நம்பி இருக்கிறார் அமிட் ஷா. திமுக ஆட்சியை அகற்றுவதில் உறுதியாக இருக்கிற மோடியும், அமித் ஷாவும் எப்படியும் விஜயை கூட்டணிக்கு அழைத்து வந்துவிடுவார்கள் என அன்புமணியும், டிடிவி.தினகரனும் நம்புகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு அந்த நம்பிக்கை இல்லை என்கிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
எகிறிய ஸ்டாலின்... திமுகவினரை வைத்தே வழிக்குக் கொண்டு வந்த காங்கிரஸ்... பரபர பின்னணி..!
Recommended image2
பஞ்சாயத்து ஓவர்.. திமுக - காங்கிரஸ் டீல் முடிந்தது.. ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இத்தனை இடங்களா?
Recommended image3
தொழில் அதிபர் 'இதயம்' வி.ஆர்.முத்து காலமானார்.. சோகத்தில் மூழ்கிய விருதுநகர்!
Related Stories
Recommended image1
எகிறிய ஸ்டாலின்... திமுகவினரை வைத்தே வழிக்குக் கொண்டு வந்த காங்கிரஸ்... பரபர பின்னணி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved