MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஓயாமல் டார்ச்சர் செய்த மாமியார்... வேறு வழியில்லாமல் ஐ.டி பெண் ஊழியர் செய்த காரியம்.. நடந்தது என்ன?

ஓயாமல் டார்ச்சர் செய்த மாமியார்... வேறு வழியில்லாமல் ஐ.டி பெண் ஊழியர் செய்த காரியம்.. நடந்தது என்ன?

பெங்களூருவில் மாமியார் கொடுமை காரணமாக ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுஷ்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை என பெற்றோர் புகார் அளித்தனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 04 2026, 10:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் புனீத் குமார். இவரது மனைவி சுஷ்மா. ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதி ஆண் குழந்தை உள்ளது. குழந்தையை பிறந்ததை அடுத்து சுஷ்மா வேலையில் நின்றுவிட்டார். ஆனால், வீட்டில் இருந்த சுஷ்மாவை மாமியார் கல்பனா எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லி வந்துள்ளார். சின்ன விஷயத்தை கூட பெரிய அளவில் பிரச்சினை செய்தார். இதனால், அடிக்கடி மாமியார் – மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

24
Image Credit : Asianet News

இதனால் மாமியார் மருமகள் சுஷ்மாவை சமைக்க விடாமல் இருந்துள்ளார். அவரது கணவனும் கண்டும் காணாமல் இருந்ததால் சுஷ்மா கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். வாழ்ந்த வாழ்க்கை போதும் எண்ணிய சுஷ்மா வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த கணவர் மற்றும் குழந்தை கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
தாலி கட்டின புருஷன் வேணாம்.. கள்ளக்காதலன் தான் வேணும்.. அடம்பிடித்த மனைவி.. காலையில் காத்திருந்த அதிர்ச்சி
Related image2
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
34
Image Credit : Asianet News

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுஷ்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது மகள் சுஷ்மா வரதட்சணை கொடுமை காரணமாகவே உயிரிழந்ததாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வரதட்சணை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

44
Image Credit : our own

பின்னர், சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக மாமியார் கல்பனாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெங்களூரு
பெண்கள்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!
Recommended image2
எகிறிய ஸ்டாலின்... திமுகவினரை வைத்தே வழிக்குக் கொண்டு வந்த காங்கிரஸ்... பரபர பின்னணி..!
Recommended image3
பஞ்சாயத்து ஓவர்.. திமுக - காங்கிரஸ் டீல் முடிந்தது.. ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இத்தனை இடங்களா?
Related Stories
Recommended image1
தாலி கட்டின புருஷன் வேணாம்.. கள்ளக்காதலன் தான் வேணும்.. அடம்பிடித்த மனைவி.. காலையில் காத்திருந்த அதிர்ச்சி
Recommended image2
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved