MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பெற்றோருக்கு சிலை வைத்து... ஊர் மக்களின் முக்கிய பிரச்னையை தீர்த்து வைத்த ரஜினிகாந்த்!

பெற்றோருக்கு சிலை வைத்து... ஊர் மக்களின் முக்கிய பிரச்னையை தீர்த்து வைத்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பூர்வீக ஊரில், பெற்றோருக்கு சிலை வைத்தது மட்டுமின்றி... அந்த ஊரில் வாழும் மக்களின் முக்கிய பிரச்சனை ஒன்றையும் தீர்த்து வைத்துள்ளார். இதற்கு அந்த ஊர் மக்கள் தங்களின் நன்றிகளை மனம் உருகி தெரிவித்துள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 15 2023, 06:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல்... ஒரு கண்டக்டராக இருந்து, பின்னர் முறையாக நடிப்பு குறித்து பயின்று  நடிகராக மாறியவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் என்றாலும், இவருடைய பூர்வீகம் என்னவோ... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி என்கிற இடம் தான்.

25

அங்குதான் அவருடைய பெற்றோர் பிறந்தது  மற்றும் அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்து எல்லாம். இப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினர்கள் பலர் அப்பகுதியில், வாழ்ந்து வருகின்றனர். நெருங்கிய உறவினர்களின் நல்லது... கெட்டதுக்கு அடிக்கடி ரஜினிகாந்தின் அண்ணன் சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

46 வயதிலும்... வேற லெவல் அழகு! ஜிமிக்கி பெண்ணாக மாறி... சிக்குன்னு போஸ் கொடுத்த மீனா! கியூட் போட்டோஸ்!

35

ஆனால் ரஜினிகாந்த் இதுவரை ஒரு முறை கூட தன்னுடைய பூர்வீக கிராமமான வேப்பனபள்ளி பகுதிக்கு சென்றதில்லை. இந்நிலையில், தன்னுடைய பெற்றோர் பிறந்து வளர்ந்த பூர்வீக ஊரில் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரண்டு ஏக்கர் அளவில் நிலம் ஒன்றை வாங்கி போட்டார்.

45

அங்கு தற்போது, தன்னுடைய பெற்றோருக்கு ரஜினிகாந்த் சிலை வைத்துள்ளார். அது மட்டும் இன்றி... ஊர்மக்கள் தாகம் தீர்க்கும் வகையில், தண்ணீர் டேங்க் ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளார். அதேபோல் கால்நடைகள் மற்றும் வழியில் செல்பவர்கள் தாகம் தீர்க்கும் வகையிலும், அங்கு தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டி.. சிரிச்சியே பட வாய்ப்பை வளைத்து போட்ட சினேகா! ரகசியத்தை உடைத்த பயில்வான்!

55

ரஜினியின் பூர்வீக ஊரான வேப்பனப்பள்ளி பகுதியில், தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் பல குடும்பங்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், பெற்றோருக்கு சிலை வைத்தது மட்டுமின்றி... மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக ரஜினிகாந்த், தண்ணீர் டேங்க்யை  கட்டி  கொடுத்து தாகம் தீர்க்கும் வகையில் சில ஏற்பாடுகளை செய்துள்ளதற்கு, அந்த ஊர் மக்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை ரஜினிகாந்த் தங்களுடைய ஊருக்கு வந்ததில்லை என்கிற குறை ஒன்று மட்டுமே தங்கள் மனதில் உள்ளதாகவும், அவர் விரைவில் தங்களைப் பார்க்க வர வேண்டும் என கோரிக்கை ஒன்றியும் வைத்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved