MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 46 வயதிலும்... வேற லெவல் அழகு! ஜிமிக்கி பெண்ணாக மாறி... சிக்குன்னு போஸ் கொடுத்த மீனா! கியூட் போட்டோஸ்!

46 வயதிலும்... வேற லெவல் அழகு! ஜிமிக்கி பெண்ணாக மாறி... சிக்குன்னு போஸ் கொடுத்த மீனா! கியூட் போட்டோஸ்!

நடிகை மீனா, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு... பட்டு புடவையோடு, பளிங்கு சிலை போல் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 15 2023, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி... அந்த குழந்தையா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு, கதாநாயகியாக மாறி தன்னுடைய நடிப்பு திறமையை  வெளிப்படுத்தியவர் நடிகை மீனா. தன்னுடைய 5 வயதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள்' என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், இதை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் சைல்ட் ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ளார். 

27
Meena

Meena

இதை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக தன்னுடைய 14 வயதிலேயே ஹீரோயினாக அவதாரம் எடுத்த மீனா, தெலுங்கில் தன்னுடைய ஹீரோயின் பயணத்தை துவங்கினார். பின்னர்  தமிழில்... கடந்த 1991 ஆம் ஆண்டு, நடிகர் ராஜ் கிரண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'என் ராசாவின் மனசிலே' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டி.. சிரிச்சியே பட வாய்ப்பை வளைத்து போட்ட சினேகா! ரகசியத்தை உடைத்த பயில்வான்!

37

முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலுமே பிஸியான நடிகையாக மாறினார். குறிப்பாக தமிழ் திரையுலக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் தேடப்படும் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். 

47

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சரத்குமார், விஜயகாந்த், என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் மீனா. அதிலும் ரஜினி - மீனா கெமிஸ்ட்ரி 90-களில்  அதிக வரவேற்பை பெற்றது. இவர்கள் இருவரும், இணைந்து நடித்த...  எஜமான், முத்து, வீரா, போன்று படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்த படங்களாகும்.

நயன்தாராவுடன் ரொமான்டிக்காக டூயட் பாடும் ஷாருக்கான்! 'ஜவான்' பட பாடல் வீடியோ லீக் ஆனதால் ஷாக்!

57

வயது அதிகரித்ததால், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல்... அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்கள் வர துவங்கிய பின்னர், திருமணத்திற்கு ஓகே சொன்ன மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு, பெற்றோர் பார்த்த  வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.

67

திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகை மீனா வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு, மீனாவின் கணவர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். கணவர் மரணத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மீனாவை அவரது தோழிகள் தான் தேற்றி, வெளியே கொண்டு வந்தனர்.

ஒரு பக்கம் முகம் வீங்கி... மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பிரபல நடிகை! ஷாக்கிங் புகைப்படம்...

77

சமீபத்தில் கூட நடிகை மீனா திரையுலகில் வெற்றிகரமாக 40 வருடங்கள் நிறைவு செய்ததற்கு மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாடப்பட்டது. மெல்ல மெல்ல... இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் மீனா இந்த வர தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பட்டு புடவையில்... ஜிமிக்கி கம்மலுடன், சிக்கென கொடுத்திருக்கும் கியூட் போசுகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved