பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டி.. சிரிச்சியே பட வாய்ப்பை வளைத்து போட்ட சினேகா! ரகசியத்தை உடைத்த பயில்வான்!
நடிகை சினேகா நைட் பார்ட்டிக்கு சென்று படவைப்பை கைப்பற்றியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயாவிற்கு பிறகு புன்னகை அரசி என்கிற பெயரை தனதாக்கி கொண்டவர் நடிகை சினேகா. பார்ப்பதற்கு, பக்கத்து வீட்டு பெண் போல்... எதார்த்தமான அழகு, குறுகுறு கண்கள், முத்து சிதறும் சிரிப்பு.. என, அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்தார் சினேகா.
மலையாளத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான நடிகை சினேகா, அதே வருடம், தமிழிலும் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 'என்னவளே' என்கிற படத்தில் நடித்திருந்தார். சுமாரான வெற்றியை இப்படம் பெற்றாலும், அடுத்தடுத்து சினேகாவுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், கிங், ஏப்ரல் மாதத்தில், என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
90ஸ் கிட்ஸ்யின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சினேகா, தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து, தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர்.
குறிப்பாக தமிழில் அஜித், விஜய், கமல், சிம்பு, மாதவன் தனுஷ் பிரசாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சினேகா... முன்னணி நடிகையாக இருக்கும் போதே, கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு அழகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.
ஒரு பக்கம் முகம் வீங்கி... மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பிரபல நடிகை! ஷாக்கிங் புகைப்படம்...
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சினேகா, பட்டாஸ் படத்தை தொடர்ந்து, மம்மூட்டி நடித்துள்ள கிறிஸ்டோபர் என்கிற படத்தில் நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சினேகா குறித்து சர்ச்சை விமர்சகரான, பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ள தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பற்றி எரிகிறது. அதாவது ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகளுக்காக நடிகை சினேகா பல்வேறு நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு தான் பட வாய்ப்பு கைப்பற்றியதாக கூறியுள்ளார்.
மார்பகங்கள் இப்படி இருக்குனு விமர்சிச்சாங்க! சோகத்தை பகிர்ந்த ரஜினி பட ஹீரோயின் ராதிகா ஆப்தே!