மார்பகங்கள் இப்படி இருக்குனு விமர்சிச்சாங்க! சோகத்தை பகிர்ந்த ரஜினி பட ஹீரோயின் ராதிகா ஆப்தே!
நடிகை ராதிகா ஆப்தே, தன்னுடைய மார்பகங்கள் பெரிதாக இல்லை என கூறி சிலர் விமர்சனம் செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Image: Radhika Apte / Instagram
பிரபல பாலிவுட் நடிகையான, ராதிகா ஆப்தே.. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். தமிழில், இவர் பிரகாஷ் ராஜ் நடித்த 'தோனி', படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அழகு ராஜா, படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான 'கபாலி', படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தினார்.
Breaking: நாளை வெளியாகுமா ருத்ரன்..? சற்று முன் நீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
இந்த படத்திற்கு பின்னர், தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், சர்ச்சையான கதாபாத்திரங்களை கூட அசால்டாக ஏற்று நடித்து மிரட்டினார். குறிப்பாக இவர் அரை நிர்வாணமாக நடித்த படம் ஒன்றிற்காக இவரை தடை செய்யவேண்டும் என்று கூட பலர் சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்த சம்பவங்களும் உண்டு.
சமீப காலமாக திரைப்படங்களை விட வெப் சீரீஸ்களில், முக்கியமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும் ராதிகா ஆப்தே... ஆரம்ப காலத்தில் தனக்கு எதிராக முன் வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வேதனையோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
தலைவி வேற ரகம் போலயே... இதுவரை நயன் குறித்து யாருக்கும் தெரியாத ரகசியங்களை உடைத்த சரண்யா பொன்வண்ணன்!
இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னுடைய மூக்கு சரி இல்லை என்பதற்காக சிலர் தனக்கு பட வாய்ப்புகள் கொடுக்க மறுத்ததாகவும், பின்னர் தன்னுடைய மார்பகங்கள் சிறிதாக இருப்பதாகவும், சிலர் விமர்சித்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதே போல் நான் கொஞ்சம் உடல் எடை கூடியதால் பல பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறியுள்ளார். இது போல் பெண்களை உருவ கேலி செய்பவர்கள் அது அவர்களின் உரிமை என கருதுவதாக ராதிகா ஆப்தே பேசியுள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.