Asianet News TamilAsianet News Tamil

Breaking: நாளை வெளியாகுமா ருத்ரன்..? சற்று முன் நீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

'ருத்ரன்' படத்தின் டப்பிங் உரிமம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில், நாளை ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாக இருந்த 'ருத்ரன்' படத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இதுகுறித்த மேல் முயறியீடு குறித்து விசாரணைக்கு பின், சற்று முன் தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.
 

Rudhran movie releasing tomorrow court cancel lifted on banned
Author
First Published Apr 13, 2023, 3:38 PM IST | Last Updated Apr 13, 2023, 3:38 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் -  பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள 'ருத்ரன்' திரைப்படம், ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார் ஃபை ஸ்டார் கிரியேஷன் தயாரிப்பாளர் கதிரேசன். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒரு முறை அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் போன நிலையில், மீண்டும் இப்படம் நாளை வெளியாவதில் திடீர் சிக்கல் உருவானது.

அதாவது 'ருத்ரன்' திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

KD படப்பிடிப்பில் விபத்து? உண்மை உடைத்த சஞ்சய் தத்..!

Rudhran movie releasing tomorrow court cancel lifted on banned

இதற்காக 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம், முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50  லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

தலைவி வேற ரகம் போலயே... இதுவரை நயன் குறித்து யாருக்கும் தெரியாத ரகசியங்களை உடைத்த சரண்யா பொன்வண்ணன்!

இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி படி தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு.

Rudhran movie releasing tomorrow court cancel lifted on banned

எனவே ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாக இருந்த ருத்ரன் திரைப்படம் வெளியாகுமா என சந்தேகம் எழுந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தடையை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்ததோடு, படத்தை குறித்த நேரத்தில் வெளியிடாவிட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் டப்பிங் உரிமம் பற்றிய தங்கள் தரப்பு நியாயத்தையும் படக்குழு எடுத்து கூறிய நிலையில், தடையை நீக்கி சென்னை உயர் நீதி மன்றம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே ருத்ரன் திரைப்படம் நாளை எவ்வித பிரச்னையும் இன்றி வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த தகவல் படக்குழுவினரையும், ராகவா லாரன்ஸ் ரசிகர்களையும் உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமந்தா முதல் யோகி பாபு வரை... தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் 8 படங்கள்! முழு விவர

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios