- Home
- Cinema
- கிசுகிசு
- Anirudh : இப்போ காவ்யா மாறன்; இதற்கு முன் அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள் யார்?
Anirudh : இப்போ காவ்யா மாறன்; இதற்கு முன் அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள் யார்?
இசையமைப்பாளர் அனிருத், அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்குவது வழக்கம், அந்த வகையில் தற்போது காவ்யா மாறன் உடனான காதல் விவகாரம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Anirudh - Kavya Maran Love Rumours
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் (Anirudh). தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அந்த வகையில் லேட்டஸ்டாக அவரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. காவ்யா மாறன் (Kavya Maran) தற்போது ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்.
இருவரும் ஜோடியாக டின்னர் சாப்பிட சென்றதாகவும், ஒன்றாக வெளிநாடுகளில் உலா வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இருவருமே இதுகுறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். காவ்யா மாறனுக்கு முன்னர் அனிருத் உடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
அனிருத் - கீர்த்தி சுரேஷ் காதல்
இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை கீர்த்தி சுரேஷும் காதலிப்பதாக தகவல் பரவியது. அதற்கு காரணம் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தான். அதைப்பார்த்த நெட்டிசன்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பேசத் தொடங்கினர். ஆனால் இதுபற்றி விளக்கம் அளித்த கீர்த்தி சுரேஷ் பெற்றோர், இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அவர்களுக்கு இடையே காதல் என்பதெல்லாம் வெறும் வதந்தி என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தனர்.
அனிருத் - ஜோனிடா காந்தி காதல்
அனிருத் இசையில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் ஜோனிடா காந்தி. இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியாகும் பாடல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அனிருத் உடன் ஜோனிடா ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனதால், இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால் இருவரும் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அண்மையில் கூட அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் ஜோனிடா கலந்துகொண்டு பாடல்கள் பாடி இருந்தார்.
அனிருத் - ஆண்ட்ரியா காதல்
இசையமைப்பாளர் அனிருத் முதன்முதலில் காதல் வலையில் சிக்கியது ஆண்ட்ரியா உடன் தான். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் லீக் ஆனதால் இவர்கள் காதலும் பிரேக் அப் ஆனது. பின்னர் ஆண்ட்ரியா உடனான காதல் முறிவு குறித்து பேசிய அனிருத், தங்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் தான் காதல் முறிவுக்கு காரணம் என கூறினார். அனிருத்தை விட ஆண்ட்ரியா ஆறு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.