ஆசை யாரை விட்டுச்சு... பாலாவிடம் சிக்கிய அருண் விஜய்! ஒவ்வொரு நாளும் ரணகளம்... நொந்து நூடுல்ஸ் ஆகும் பரிதாபம்?
இயக்குனர் பாலா, 'வணங்கான்' ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்ம கடுப்பாகவே இருந்து, அருண் விஜய்யிடம் வேலை வாங்குவதால் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு ரணகளமாக செல்வதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகி வந்த 'வணங்கான்' திரைப்படம், சில பல... பிரச்சினைகளாலும், மனஸ்தாபங்களாலும், சூர்யா கையை விட்டு நழுவ, அவரும் பாலா விட்டதே போதும் என அதிரடியாக படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர், 'வணங்கான்' படத்தை, நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்க துவங்கினார் பாலா. சூர்யாவை விட அருண் விஜய்க்கு தான் இந்த கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக உள்ளதாக கோலிவுட் தரப்பில் சில செய்திகள் வெளியான நிலையில், சூர்யாவை வைத்து 30 நாட்களில் எடுத்து முடித்த காட்சியை கூட 20 நாளில் அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.
ஒரு பக்கம் முகம் வீங்கி... மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பிரபல நடிகை! ஷாக்கிங் புகைப்படம்...
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. படம் ஒரு பக்கம் விறுவிறுப்பாக வளர்ந்து வந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் கடு கடுவென பாலா இருப்பது தான் அருண் விஜய்க்கு மிகப்பெரிய பிரச்சனை என்று சொல்லப்படுகிறது.
அருண் விஜய்யை பொறுத்தவரை மிகவும் ஜாலியான மனிதர். பாலாவும் வெளியில் இருந்து பார்க்க ஜாலியான மனிதர் தான், ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் எப்போதுமே மிகவும் கோபமாகவே இருப்பாராம். அவரும் யாரிடமும் பேச மாட்டாராம், அவர் படத்தில் நடிப்பவர்கள், துணை இயக்குனர்கள் கூட அதிகம் பேச கூடாது என நினைப்பாராம்.
மார்பகங்கள் இப்படி இருக்குனு விமர்சிச்சாங்க! சோகத்தை பகிர்ந்த ரஜினி பட ஹீரோயின் ராதிகா ஆப்தே!
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கூட அருண் விஜய் அதிகம் பேசும் சுபாவத்தை மாற்றிக்கொண்டு நொந்து கொண்டு தான் நடித்தார் என கூறப்படுகிறது. இப்படி கடந்து சென்ற நாட்கள் அவருக்கு ரணகளமாகவே சென்றுள்ளது... பாவம் பாலா படத்துக்கு ஆசை பட்ட அருண் விஜய்க்கு இந்த நிலையா? என விவரம் தெரிந்தவர்கள் பரிதாபத்தோடு கூறி வருகிறார்களாம். இப்படி பரவி வரும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.