ஊடகம் இல்லையென்றால் என்ன.. திமுகவின் கோர முகத்தை வெளிக்கொண்டுவர இதுபோதும்.. நாராயணன் திருப்பதி..!
திமுக அமைச்சர்களின் ஊழல்கள் என்று பெரிதாக ஏதும் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. குறிப்பாக ஆளுங்கட்சி என்பதால் இதுதொடர்பான செய்தியை எந்த ஊடகங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இனி எந்த விவாதத்திற்கு பாஜகவினர் சென்றாலும், இன்றைய ஊழல் ஒழிப்பு பிரகடனம் குறித்து விவாதிக்காதது ஏன் என்பதே நம் முதல் கேள்வி என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
திமுகவினரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நெருக்கமானவர்கள் என பலரின் சொத்து மதிப்புகள் மொத்தமாக 1.31 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாகவும், கனிமொழி- ரூ.830,33 கோடி, ஜெகத்ரட்சகன் - ரூ.50,219,37 கோடி, எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி, கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிட்டிருந்தார். அடுத்தக்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
ஆனால், திமுக அமைச்சர்களின் ஊழல்கள் என்று பெரிதாக ஏதும் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. குறிப்பாக ஆளுங்கட்சி என்பதால் இதுதொடர்பான செய்தியை எந்த ஊடகங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், வியாபாரத்திற்கு பயந்து அஞ்சி நடுங்கி ஊடகங்கள் தங்களின் கடமையை செய்ய தவறி ஓடி ஒளிந்து கொண்டு விட்டன என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஹா ஹா ஹா! வெற்றி ! வெற்றி! பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை எந்த தொலைக்காட்சி நிறுவனமும் விவாதிக்கவில்லை. காரணம் : வம்பே வேண்டாம், தோண்ட தோண்ட ஊழல் குறித்து அதிகம் பேச வேண்டி வரும் என்று திமுக, ஊடகங்களை நிர்ப்பந்தித்தது, உத்தரவிட்டது.
வியாபாரத்திற்கு பயந்து அஞ்சி நடுங்கி ஊடகங்கள் தங்களின் கடமையை செய்ய தவறி ஓடி ஒளிந்து கொண்டு விட்டன. கவலை வேண்டாம். சமூக ஊடகங்கள் திமுகவின் கோர முகத்தை வெளிக்கொண்டு வந்து விட்டது. ஆனால், இனி எந்த விவாதத்திற்கு பாஜகவினர் சென்றாலும், இன்றைய ஊழல் ஒழிப்பு பிரகடனம் குறித்து விவாதிக்காதது ஏன் என்பதே நம் முதல் கேள்வி என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.