உபியை கதிகலங்க வைத்த டான் அடிக் அகமது மற்றும் அஷ்ரப் சுட்டுக்கொலை - பரபரப்பு சம்பவம்

பிரயாக்ராஜில் அடிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Jailed gangster Atiq Ahmed, his brother shot dead in UP

உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் (ஏப்ரல் 15) என்கவுன்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வியாழன் அன்று என்கவுன்டரில் கொல்லப்பட்ட அடிக் அகமதுவின் மகன் ஆசாத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் அடிக் அகமது பிரயாக்ராஜில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரயாக்ராஜில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட MLN மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Jailed gangster Atiq Ahmed, his brother shot dead in UP

இந்த சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் வெளியாகி வரும் நிலையில், இரண்டு மூன்று பேர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று, அதிக் அகமதுவின் மகன் ஆசாத் அஹம்தின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன, அடிக் அகமது அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.

Jailed gangster Atiq Ahmed, his brother shot dead in UP

தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. சனிக்கிழமையன்று அடிக் அகமது மற்றும் அஷ்ரஃப் ஆகியோரிடம் உத்தரபிரதேச போலீசார் தூமங்கஞ்ச் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் பிரயாக்ராஜில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்

இதையும் படிங்க..அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்.. பதறியடித்து போய் விளக்கம் கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios