பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக ஜார்கண்ட் மாநிலம் செல்லவுள்ளார். அம்மாநிலத்தில் உள்ள பிர்சா முண்டாவின் கிராமத்துக்கும் அவர் செல்லவுள்ளார்
Tamil News Live Updates: தீபாவளியால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது

தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சென்னையில் காற்று மாசு கடந்த 10-ந் தேதி நிலவரப்படி 83 ஆக இருந்த நிலையில், தீபாவளி முடிந்த பின்னர் 200-ஐ கடந்துள்ளது. சென்னையில் விடிய விடிய வாண வெடிகளை வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே இந்த காற்று மாசு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி ஜார்கண்ட் பயணம்: பிர்சா முண்டாவின் ஊருக்கு செல்லும் முதல் பிரதமர்!
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சராக டேவிட் கேமரூன் நியமனம்!
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஒரே நாள்.. தடையை மீறிய மக்கள்.. மீண்டும் Red Zoneல் தலைநகர் - மேலும் இரு முக்கிய நகரங்களில் காற்று மாசு!
Delhi Air Pollution : கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகம் இல்லாத ஒரு தீபாவளி திருநாளை டெல்லி மக்கள் கொண்டாடினர். ஆனால் அவர்களின் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.
நான் பதவியை எதிர்பார்த்து கட்சியில் இல்லை: சி.டி.ரவி!
பதவியை எதிர்பார்த்து கட்சியில் நான் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சிடி ரவி தெரிவித்துள்ளார்
ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேன்டீன்.. கண்ணாடி பெட்டிக்குள் பஜ்ஜியை ருசிபார்த்த எலி - அதிர்ச்சியில் நோயாளிகள்!
Chennai Stanley GH : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீனில், தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள் எலிகள் நடமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு: முதல்வர் அசோக கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!
உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியை பறித்த பிரதமர் ரிஷி சுனக்!
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை அப்பதவியில் இருந்து பிரதமர் ரிஷி சுனக் நீக்கியுள்ளார்
மோடி அரசின் துரோகம்: வெறுப்பில் இளைஞர்கள் - காங்கிரஸ் காட்டம்!
பிரதமர் மோடி அரசின் துரோகத்தால் இளைஞர்கள் வெறுப்படைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது
தீபாவளி பண்டிகை: சிவகாசியில் ரூ.6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ரூ.6000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 2ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி; ஆக்சிஜன், உணவு விநியோகம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
Cup-ஐ நெருங்கும் பிகில்... மாணவர்களின் வாக்கை குறிவைத்து விஜய் போட்ட அடுத்த மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், அவரின் அடுத்தக்கட்ட பிளான் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பறவைகளை காக்க ஒரு "சைலென்ட் தீபாவளி".. 22 ஆண்டுகளாக தொடரும் ஆச்சர்யம் - தமிழகத்தின் 7 அதிசய கிராமங்கள்!
Erode : தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமங்களில், சிறகுகள் கொண்ட சின்னங்சிறு உயிர்களை கருத்தில் கொண்டு, சத்தமின்றி, விளக்குகள் மட்டுமே வைத்து விழாவை கொண்டாட முடிவு செய்தனர் சில கிராம மக்கள்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி... மௌலானா ரஹீமுல்லா தாரிக் கராச்சியில் சுட்டுக்கொலை
கராச்சியில் உள்ள ஒராங்கி நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மௌலானா ரஹீமுல்லா தாரிக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தீபாவளிக்கு சுட சுட சமபந்தி கறி விருந்து பரிமாறிய விஷால்... ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு புடி புடித்த ஊழியர்கள்
நடிகர் விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்கள் அனைவருக்கும் சமபந்தி கறி விருந்து பரிமாறி அவர்களோடு உண்டு மகிழ்ந்தார் விஷால்.
கடலோர பகுதி மக்களே உஷார்.. அடுத்த 48 மணிநேரத்துக்கு நல்ல மழை வெளுத்துவாங்க போகுது - ஆய்வு மையம் தகவல்!
Tamil Nadu Weather Update : தமிழகம் முழுவதும் தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கின்ற நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் கேரளா மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் புஸ்வானமான ஜப்பான்... சரவெடியாக வெடிக்கும் ஜிகர்தண்டா - தீபாவளி ரிலீஸ் படங்களின் வசூல் நிலவரம்
தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த கார்த்தியின் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.
கவின் மோனிகா முதல் அசோக் கீர்த்தி வரை... ஜம்முனு தலை தீபாவளி கொண்டாடிய தமிழ் சினிமா பிரபலங்களின் போட்டோஸ் இதோ
புதிதாக திருமணமான தமிழ் சினிமா பிரபலங்கள் தலை தீபாவளி கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விராட் கோலி பேட் பரிசாக வழங்கி... இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் ஜெய்சங்கர்
தீபாவளியன்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவருக்கு விராட் கோலியின் பேட்டை பரிசாக வழங்கினார்.
பெட்ரோல் - டீசல் விலை
சென்னையில் 541வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதி திராவிட குடியிருப்பு பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.