பாக்ஸ் ஆபிஸில் புஸ்வானமான ஜப்பான்... சரவெடியாக வெடிக்கும் ஜிகர்தண்டா - தீபாவளி ரிலீஸ் படங்களின் வசூல் நிலவரம்
தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த கார்த்தியின் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.
Diwali release movies
தீபாவளி என்றாலே புதுப்படங்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழில் நான்கு புதுப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு மற்றும் கிடா ஆகிய படங்கள் குறைந்த அளவிலான திரையரங்கிலே ரிலீஸ் ஆகின. இந்த தீபாவளிக்கு கடும் போட்டிக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா ஆகிய திரைப்படங்கள் தான். இந்த இரு படங்களும் கடந்த நவம்பர் 10-ந் தேதி திரைக்கு வந்தன.
Japan Karthi
இதில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கி இருந்தார். பொன்னியின் செல்வன் என்கிற மாபெரும் வெற்றிப்படத்துக்கு பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியாகி உள்ள படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடி ஆக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே நெகடிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின.
Japan Boxoffice
ஜப்பான் திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.7 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. ஆனால் தீபாவளி தினமான நேற்று இப்படம் ரூ.4 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் இப்படத்திற்கு ரூ.2.61 கோடி வசூல் கிடைத்துள்ளது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளதால் இப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமையவும் வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Jigarthanda Double X
அதேபோல் ஜப்பானுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் களமிறங்கிய மற்றொரு பெரிய பட்ஜெட் படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இது கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜிகர்தண்டா படத்தின் 2-ம் பாகமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா நட்ராஜன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
Jigarthanda Double X box office
ஜப்பான் படத்தைக் காட்டிலும் இப்படம் நன்றாக இருந்ததால், இந்த ஆண்டு தீபாவளி வின்னராக ஜிகர்தண்டா மாறி உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதல் இரு தினங்களில் ரூ.7.27 கோடி வசூலித்து இருந்த இப்படம். தீபாவளி தினமான நேற்று மட்டும் ரூ.7.25 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கவின் மோனிகா முதல் அசோக் கீர்த்தி வரை... ஜம்முனு தலை தீபாவளி கொண்டாடிய தமிழ் சினிமா பிரபலங்களின் போட்டோஸ் இதோ