கவின் மோனிகா முதல் அசோக் கீர்த்தி வரை... ஜம்முனு தலை தீபாவளி கொண்டாடிய தமிழ் சினிமா பிரபலங்களின் போட்டோஸ் இதோ
புதிதாக திருமணமான தமிழ் சினிமா பிரபலங்கள் தலை தீபாவளி கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Thala Diwali celebration
தமிழர்கள் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. இந்த தீபாவளி திருநாளில் பட்டாசு வெடித்தும், புத்தாடை உடுத்தியும் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியும் களைகட்டியது. அதேபோல் புதுமண ஜோடிகளும் தலை தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினர். அந்த வகையில் புதிதாக திருமணமான தமிழ் சினிமா பிரபலங்களின் தலை தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Amala Paul Thala Diwali
நடிகை அமலா பால் தனது காதலனான ஜகத் தேசாய் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி தலை தீபாவளியை கொண்டாடி இருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருடன் தலை தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ashok selvan Thala Diwali
தமிழ் சினிமாவில் காதல் ஜோடியாக வலம் வந்த அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரோடு பாரம்பரிய உடை உடுத்தி தங்களின் தலை தீபாவளியை கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் தான் இது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
hansika Thala Diwali
நடிகை ஹன்சிகா தனது காதலனான சோஹைல் கத்தூரியாவை கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் தங்களது தலை தீபாவளியை தங்கள் பேமிலியோடு ஜம்முனு கொண்டாடி உள்ளனர். தலை தீபாவளி கொண்டாட்டத்தின் போது இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படம் இது.
Vijay Thala Diwali
எருமைசானி என்கிற யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி பின்னர் நடிகராக சில படங்களில் நடித்த விஜய் விருஸ், கடந்தாண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த டி பிளாக் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் தனது நீண்டநாள் காதலியான நட்சத்திராவை கடந்த சில மாதங்களுக்கு முன் கரம்பிடித்தார். இந்த காதல் ஜோடியின் தலை தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் தான் இது.
Harish Kalyan Thala Diwali
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு கடந்தாண்டு திருமணம் முடிந்த நிலையில், இந்த ஆண்டு தனது தலை தீபாவளியை கொண்டாடி உள்ளார். அப்போது மனைவியுடன் அவர் எடுத்த ரொமாண்டிக் கிளிக் தான் இது.
Kavin Thala Diwali
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது காதலி மோனிகா டேவிட்டை கரம்பிடித்தார். இந்த ஜோடியும் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடி உள்ளது. அப்போது எடுத்த புகைப்படத்தை கவினின் மனைவி மோனிகா டேவிட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க.. விளையாட்டில் மத அரசியல்.. ரஜினியின் லால் சலாம் டீசர் ரிலீஸ்.!!