MK STALIN : 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த திமுக அரசு...இது சொல்லாட்சி அல்ல.. செயலாட்சி!- ஸ்டாலின் பெருமிதம்

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என சொன்னார் தலைவர் கலைஞர், இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்து காட்டியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

At the beginning of his 4th year of rule Stalin promised to work for the welfare of the country and the state KAK

4ஆம் ஆண்டில் திமுக அரசு

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை மக்கள் வரவேற்று வருகின்றனர். குறிப்பாக மகளிர் இலவச பேருந்து திட்டம், மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை திட்டம், சுய உதவி குழுவில் மகளிர் முன்னேற்றம் பெற கடன், பெண்களுக்கான தங்கும் விடுதி, பள்ளிகளில் காலை உணவு திட்டம், நான் முதல்வர் திட்டம், புதுமை பெண் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, திருநங்கைகளுக்கு நிலம் ஒதுக்கி விடு கட்டும் திட்டம், வீடு தேடி மருத்துவம், வீடு தேடி கல்வி என பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.  

 

மக்களின் முகத்தில் மகிழ்ச்சியே சாட்சி

இந்தநிலையில் 3 ஆண்டுகால ஆட்சி முடிந்து 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு நனன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான், உங்களுடைய நல் ஆதரவையும் நம்பிக்கையும் பெற்று நமது மாநிலத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்று ஆண்டு நிறைவு பெற்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள். மே 7ஆம் தேதி,  இந்த மூன்று ஆண்டு காலத்தில் நாம் செய்து  கொடுத்த சாதனைகள், திட்டங்கள் நன்மைகள் என்னென்ன தினந்தோறும் பயன் அடைந்த மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி என தெரிவித்தார். 

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என சொன்னார் எங்களை ஆளாக்கிய தலைவர் கலைஞர்,  இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்து காட்டியிருக்கோம். எப்பவும் நான் சொல்வது எனது அரசு அல்ல, நமது அரசு, அந்த வகையில், நமது அரசு 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும் மாநிலமும் பயன் பெற உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்தோடு தொடர்வேன் என ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Lok Sabha Election : தொடங்கியது 3ஆம் கட்ட வாக்குப்பதிவு.. எத்தனை தொகுதி.? முக்கிய வேட்பாளர்கள் யார் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios