MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பாண்டியா, சாவ்லா, பும்ராவை சமாளிக்க முடியாமல் திணறிய சன்ரைசர்ஸ்: ஹைதராபாத் 173 ரன்கள் குவிப்பு!

பாண்டியா, சாவ்லா, பும்ராவை சமாளிக்க முடியாமல் திணறிய சன்ரைசர்ஸ்: ஹைதராபாத் 173 ரன்கள் குவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 55ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 06 2024, 10:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 55ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

26
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

இதில், போட்டியின் முதல் ஓவரை நுவான் துஷாரா வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. 2ஆவது ஓவரை அறிமுக வீரர் அன்ஷூல் கம்போஜ் வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. துஷாரா வீசிய 3ஆவது ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. பின்னர் 4ஆவது ஓவர் பும்ராவிற்கு கொடுக்கப்பட்டது.

36
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மறுபடியும் கம்போஜ் வந்தார். அவர் வீசிய 5ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் டிராவிஸ் ஹெட் கிளீன் போல்டானார். இதையடுத்து அவர் வெளியில் நடந்து சென்று கொண்டிந்த போது நோபாலுக்கான சிக்னல் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஹெட் மீண்டும் பேட்டிங் செய்தார். ஆனால், தனது அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த கம்போஜ் மகிழ்ச்சியில் கொண்டாடினார்.

46
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

ஆனால், அதற்குள்ளாக நோபால் கொடுக்கப்படவே ஏமாற்றம் அடைந்தார். அடுத்த பந்திலேயும் நோபால் வீசினார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கொடுத்தார். 5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 51 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பும்ரா பந்து வீச வந்தார். அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில், இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

56
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

அடுத்து அன்ஷூல் கம்போஜ் தனது முதல் விக்கெட்டாக மாயங்க் அகர்வால் விக்கெட்டை கைப்பற்றினார். 2 முறை அவுட்டிலிருந்து தப்பித்த ஹெட் 48 ரன்களில் நடையை கட்டினார். நிதிஷ் ரெட்டி 20, ஹென்ரிச் கிளாசென் 20, மார்கோ ஜான்சென் 17, ஷாபாஸ் அகமது 10, அபதுல் சமாத் 3 என்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக பேட் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

66
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங்கை பொறுத்த வரையில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டும், அன்ஷூல் கம்போஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
ரோகித் சர்மா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved