Asianet News TamilAsianet News Tamil

Election : தலைவன் மகனுக்கும்.. தொண்டன் மகனுக்கும் நடக்கும் போர்.. விஜயகுமாரின் Election - மாஸ் ட்ரைலர் இதோ!

Election Movie Trailer : பிரபல இயக்குனர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் தான் Election. ஆதித்யா என்பவர் தயாரிக்க, தமிழ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

First Published May 11, 2024, 7:51 PM IST | Last Updated May 11, 2024, 7:51 PM IST

சென்னையில் பிறந்து பிரபல ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் தான் இயக்குனர் விஜயகுமார். அதன்பிறகு தனக்கு மிகவும் பிடித்தமான சினிமா பாதையில் பயணிக்க முடிவு செய்து, "நாளைய இயக்குனர்" என்கின்ற நிகழ்ச்சியில் தனது படைப்புகளை வெளியிட்டார். 

அதன் பிறகு பல ஆண்டுகள் சினிமா துறையில் பயணித்து கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "உறியடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் களமிறங்கினார். அந்த திரைப்படத்தை இயக்கியதற்காக சைமா, ஆனந்த விகடன் நார்வே தமிழ் திரைப்பட விருது வழங்கும் விழா உள்ளிட்டவற்றில் உரியடி திரைப்படம் விருதுகளை வென்றது. 

அதன்பிறகு விஜயகுமாரின் இயக்கத்தில் உறியடி படத்தின் இரண்டாம் பாகமும் வெளியான நிலையில் அண்மையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கிய "ஃபைட் கிளப்" என்கின்ற திரைப்படத்திலும் நாயகனாக நடித்திருந்தார் விஜயகுமார். 

இந்த சூழ்நிலையில் இயக்குனர் தமிழ் இயக்க, ஆதித்யா தயாரிக்கும் "எலக்சன்" என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் விஜயகுமார். முழுக்க முழுக்க அரசியல் களம் சார்ந்த இந்த திரைப்படத்தில், ஒரு தலைவனின் மகனுக்கும், தொண்டனின் மகனுக்கும் நடக்கும் போராட்டங்களை மிக எதார்த்தமாக கூறியுள்ள படம் தான் எலக்சன். தற்பொழுது அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 

Video Top Stories