என்ன ஒரு தைரியம் பாத்தியா? கிரிவலப் பாதையில் பெண் செய்த காரியம்! ரவுண்ட் கட்டிய பொதுமக்கள்.. நடந்தது என்ன?

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் APTUS என்ற பெயரில் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பே கோபுர தெருவை சேர்ந்த லோகேஷ் என்பவர் பணம் சேகரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 

Tiruvannamalai two wheeler theft... 3 people including woman arrested tvk

கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருடி தப்பித்த பெண் உள்ளிட்ட மூவருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் APTUS என்ற பெயரில் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பே கோபுர தெருவை சேர்ந்த லோகேஷ் என்பவர் பணம் சேகரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பிற்பகல் மதிய உணவிற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று பின்னர் அலுவலகம் திரும்பிய லோகேஷ் இருசக்கர வாகனத்தை அலுவலகத்திற்கு கீழே நிறுத்திவிட்டு பணி காரணமாக அலுவலகத்திற்குள் சென்றார். 

இதையும் படிங்க: திருமணமான 3 நாளில் காதலனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்! வாழ்க்கையை நாசமாக்கிய லிவிங் டுகெதர்! நடத்தது என்ன?

Tiruvannamalai two wheeler theft... 3 people including woman arrested tvk

இந்நிலையில் இதனை நோட்டமிட்ட பெண் உள்ளிட்ட 3 நபர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த கள்ள சாவியை போட்டு இருசக்கர வாகனத்தை இயக்கி கிரிவலப் பாதையில் இருந்து தப்பித்தனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த சக ஊழியர்கள் அலுவலகத்திற்குள் சென்று இருசக்கர வாகனத்தை எவரிடமாவது கொடுத்து அனுப்பி உள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியவுடன் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் கீழே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

Tiruvannamalai two wheeler theft... 3 people including woman arrested tvk

உடனடியாக அலுவலக ஊழியர்களின் உதவியோடு கிரிவலப் பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்த பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதையில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்வதை கண்டு பின் தொடர்ந்து சென்ற லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாகனத்தை மடக்கி பிடித்து மூவரையும் பிடித்து சரமாரியாக தாக்கியதில் ஒருவர் அங்கிருந்து தப்பித்துள்ளார். மேலும் அங்கிருந்த பொதுமக்களும் திருடர்களை சரமாரியாக தாக்கியது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 2  பேரையும் கைது செய்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில், பொதுமக்கள் உதவியோடு தப்பித்தவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதையும் படிங்க:  45 வயதான மாமியார் சித்ரா மீது மருமகனுக்கு இவ்வளவு வெறியா? நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

Tiruvannamalai two wheeler theft... 3 people including woman arrested tvk

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்: இவர்கள் மூன்று பேரும் போளூர் அல்லிநகரை சேர்ந்த வெண்ணிலா, அர்ஜுனன், சந்தோஷ் என்றும் தொடர்ந்து இருசக்கர வாகன வழிப்பறியில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 5 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். திருடப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios