திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சித்ரா (45). இவரது மகள் நிவேதா (25). இவருக்கும், திண்டுக்கலைச் சேர்ந்த ஜெயபாலுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பழனி அருகே மாமியாரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தடுக்க வந்த மனைவியின் கையை வெட்டி தப்பித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சித்ரா (45). இவரது மகள் நிவேதா (25). இவருக்கும், திண்டுக்கலைச் சேர்ந்த ஜெயபாலுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிவேதா, ஜெயபால் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். நிவேதா கலிக்கநாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் சித்ரா வீட்டில் வசித்து வந்தார். 

இதையும் படிங்க: தம்பியின் மாமியாரை மடக்கி உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலை விடாத அண்ணன்! இறுதியில் பயங்கரம்!

இதனால் ஜெயபால் அடிக்கடி கலிக்கநாயக்கன்பட்டிக்கு வந்து மாமியார், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மனைவி நிவேதா பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மகளிர் போலீசார் ஜெயபாலை அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர். இதனால் ஜெயபால் மாமியார் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதையும் படிங்க: டீ கொடுத்து ஆண்டியை கரெக்ட் செய்த மாஸ்டர்! உல்லாசத்திற்கு தடையாக இருந்த 54 வயது கணவரை கொலை செய்த 2வது மனைவி!

அப்போது ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமியார் சித்ராவை வெட்டி படுகொலை செய்துள்ளார். இதனை தடுக்க வந்த மனைவியின் கையை வெட்டிவிட்டு ஜெயபால் அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், படுகாயமடைந்த நிவேதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெயபாலை தேடி வருகின்றனர்.