பறவைகளை காக்க ஒரு "சைலென்ட் தீபாவளி".. 22 ஆண்டுகளாக தொடரும் ஆச்சர்யம் - தமிழகத்தின் 7 அதிசய கிராமங்கள்!
Erode : தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமங்களில், சிறகுகள் கொண்ட சின்னங்சிறு உயிர்களை கருத்தில் கொண்டு, சத்தமின்றி, விளக்குகள் மட்டுமே வைத்து விழாவை கொண்டாட முடிவு செய்தனர் சில கிராம மக்கள்.
பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள ஈரோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வடமுகம் வெள்ளோடு கிராமங்கள் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான உள்ளூர் பறவை இனங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் பறவைகள் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக அந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
வழக்கமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தீபாவளி பண்டிகை வருவதால், பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பட்டாசுகளை வெடித்து பயமுறுத்தாமல் பறவைகளைக் காப்பாற்ற முடிவு செய்தனர். கடந்த 22 ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு அணுகுமுறையை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
தீபாவளி சமயத்தில் தங்கள் குழந்தைகளுக்கு புதிய ஆடைகளை வாங்கித் தருவதாகவும், பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், மத்தாப்புகளை மட்டுமே எரிக்க அனுமதிப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டும் செல்லப்பம்பாளையம், வடமுகம் வெள்ளோடு, செம்மாண்டம்பாளையம், கருக்கன்காட்டு வலசு, புங்கம்பாடி ஆகிய இரு கிராமங்கள் மௌன தீபாவளி என்ற மரியாதைக்குரிய பாரம்பரியத்தை நிலைநாட்டின.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு - சென்னையில் மட்டும் இத்தனை பேர் மீது வழக்குப்பதிவா?
குடும்பங்கள் தங்கள் சொந்த வழியில் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல், அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் பாதுகாப்பாகவும் ஆனந்தமாகவும் இருந்தன.