அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு - சென்னையில் மட்டும் இத்தனை பேர் மீது வழக்குப்பதிவா?

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Police filed 581 cases filed in chennai for violation during Diwali celebration gan

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்காக தமிழக அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. அரசின் இந்த அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் அதிக அளவில் சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக கூறி 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதேபோல் மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கோவையில் கொடுத்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

சென்னையில் நேற்று இரவு வரை 100 டன் அளவில் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவுக்கும் பட்டாசு கழிவுகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் மொத்தம் 200 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... சோகத்தில் முடிந்த தீபாவளி கொண்டாட்டம்... ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios