MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • அட இது வேற லெவலா இருக்கே! சாதனை மேல் சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ ரயில்.!

அட இது வேற லெவலா இருக்கே! சாதனை மேல் சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ ரயில்.!

Chennai Metro Train: சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 02 2026, 04:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மெட்ரோ ரயில்
Image Credit : Asianet News

மெட்ரோ ரயில்

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல பல மணி நேரமாகி விடுகிறது. எனவே பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்ல மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் எத்னை லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

25
மெட்ரோ ரயில் நிறுவனம்
Image Credit : our own

மெட்ரோ ரயில் நிறுவனம்

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 96,40,993 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
ஊட்டிக்கு போறீங்களா.! பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள் எது தெரியுமா.?
Related image2
இனிமே தான் வெயில் ஆட்டமே இருக்காம்.. அதுவும் 3 மாதங்களுக்கு.. வானிலை மையம் டேஞ்சர் அலர்ட்
35
QR குறியீடு பயணச்சீட்டு முறை
Image Credit : Google

QR குறியீடு பயணச்சீட்டு முறை

அதிகபட்சமாக 20.02.2026 அன்று 3,99,503 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2026, பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 49,11,328 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,121 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,91,544 பயணிகள் (Single journey Paper QR /Token 19,10,265; Online QR – 1,26,618; Static QR 2,11,188; Whatsapp - 4,51,491; Paytm 3,27,534; ONDC – 11,47,636; PhonePe – 2,70,088; CMRL Mobile App 64,649; Chennai One App – 1,59,134; Event QR - 22,941) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

45
20% கட்டணத் தள்ளுபடி
Image Credit : our own

20% கட்டணத் தள்ளுபடி

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், (Digital SVP), க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.

55
 மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் நன்றி
Image Credit : our own

மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் நன்றி

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
சென்னை மெட்ரோ

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
சிகரெட்டால் பொசுக்கப்பட்ட மீசை... யாரும் அறியாத நல்லகண்ணு-வின் மறுபக்கம்..!
Recommended image3
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Related Stories
Recommended image1
ஊட்டிக்கு போறீங்களா.! பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள் எது தெரியுமா.?
Recommended image2
இனிமே தான் வெயில் ஆட்டமே இருக்காம்.. அதுவும் 3 மாதங்களுக்கு.. வானிலை மையம் டேஞ்சர் அலர்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved