சோகத்தில் முடிந்த தீபாவளி கொண்டாட்டம்... ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதி திராவிட குடியிருப்பு பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Cracker accident 4 year old kid died in ranipettai during diwali celebration gan

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதி திராவிட குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ரமேஷ்(28) இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி அஸ்வினி(25) இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் 4 வயதில் நவிஷ்கா (4)என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது

இந்நிலையில் அவரது சொந்த ஊரான மாம்பாக்கத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டி கொண்டிருந்தபோது ரமேஷின் அண்ணன் விக்னேஷ்(31) பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது விக்னேஷ் வைத்த  ஒரு பட்டாசு சிறுமின் மீது சிதறி விழுந்து வெடித்தது இதில் சிறுமியின் மார்பு மற்றும் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது இதனை அடுத்து உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகாமையில் உள்ள செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர் 

சிறுமி உயிர் இழந்ததை அறிந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வாழைப்பந்தல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தீபாவளி அன்று குடும்பத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பட்டாசு சிதறி சிறுமியின் மீது விழுந்து சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்... தீபாவளி கொண்டாட்டத்தால் புகைமூட்டமான சென்னை... காற்று மாசு கடுமையாக உயர்வு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios