தீபாவளி கொண்டாட்டத்தால் புகைமூட்டமான சென்னை... காற்று மாசு கடுமையாக உயர்வு

தீபாவளியை கொண்டாடும் விதமாக சென்னையில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து உள்ளது.

poor Air quality in chennai on Diwali 2023 gan

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டாடியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காற்றின் தரம் 170 ஆக இருந்த நிலையில், நேற்று இரவு அதிகளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் அது தற்போது 200-ஐ கடந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆக பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக வேளச்சேரியில் 301 ஆகவும் அரும்பாக்கத்தில் 260 ஆகவும், ஆலந்தூரில் 256 ஆகவும், ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவாகி இருந்தது. பட்டாசு வெடிக்க அரசு சார்பில் நேரம் ஒதுக்கப்பட்ட போதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பட்டாசு வெடித்ததன் காரணமாகவே இத்தகைய காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சென்னையில் காற்று மாசு கடந்த 10-ந் தேதி நிலவரப்படி 83 ஆக இருந்த நிலையில், தீபாவளி முடிந்த பின்னர் 200-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் விடிய விடிய வாண வெடிகளை வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே இந்த காற்று மாசு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசு காரணமாக சென்னையில் சாலையெங்கும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்துள்ளனர். காற்றின் தரம் இந்தளவு மோசமடைந்து உள்ளதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து; தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios