Cup-ஐ நெருங்கும் பிகில்... மாணவர்களின் வாக்கை குறிவைத்து விஜய் போட்ட அடுத்த மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், அவரின் அடுத்தக்கட்ட பிளான் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Vijay
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான ஆயத்தப்பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் முழு டார்கெட் மாணவர்கள் தான். அவர்களின் வாக்குகளை கைப்பற்றவே அவர் முனைப்பு காட்டி வருகிறார் என்பது அவர் செய்யும் செயல்கள் மூலமே தெளிவாக புரிகிறது.
Thalapathy Vijay
கடந்த ஜூன் மாதம் தனது பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இருந்து தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். குறிப்பாக 12-ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய்.
vijay makkal iyakkam
இதையடுத்து கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்தநாளன்று இரவு நேர பயிலகங்களை தொடங்கினார் விஜய். அதனை தொடர்ந்து 234 தொகுதியிலும் தங்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நூலகம் திறக்க உள்ளதாகவும் அறிவித்தனர். லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு பின்னர் அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தாங்கள் அமைக்க உள்ள நூலகங்களில் எந்தெந்த புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்கிற பட்டியலும் வெளியாகி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vijay politics
சமூக சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள், சட்ட ஆலோசனை, தமிழர் வரலாறு, சிறுவர்களுக்கான புத்தகம், இலக்கியம் என மெகா பட்டியலை தயார் செய்து அடுத்தக்கட்ட பணிகளுக்கும் ஆயத்தமாகிவிட்டது விஜய் மக்கள் இயக்கம். ஏற்கனவே பயிலகம், குறுதியகம், விலையில்லா விருந்தகம் என விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னெடுப்புகள் அனைத்தும் கவனம் பெற்றன.
vijay makkal iyakkam library
தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைப்பது, பழ வியாபாரிகளுக்கு நிழற்குடை அமைத்து கொடுப்பது என நாளுக்கு நாள் விஜய் மக்கள் இயக்கம் மக்களோடு நெருக்கம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக தான் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு என கூறியிருக்கும் விஜய், இதுபோன்ற பொது சேவைகளால் தன்னை மக்களுடன் நெருக்கமாக்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்... "நான் ரெகார்ட் மேக்கர்.." மீண்டும் நிரூபித்த தளபதி விஜய் - ஆயுத பூஜைக்கு வந்து தீபாவளியையும் தனதாக்கிய லியோ!