- Home
- Gallery
- உன்னை பார்க்கவில்லை என்றால் நான் என்னையே தொலைத்திருப்பேன் – அனுஷ்கா சர்மா குறித்து கோலி உருக்கமான பதிவு!
உன்னை பார்க்கவில்லை என்றால் நான் என்னையே தொலைத்திருப்பேன் – அனுஷ்கா சர்மா குறித்து கோலி உருக்கமான பதிவு!
அனுஷ்கா சர்மா தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Anushka Sharma Birthday
நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்கா கடந்த மே 1 ஆம் தேதி தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்சிபி கிரிக்கெட் வீரர்களான ஃபாப் டூப்ளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
Virat Kohli Wishes
இது தொடர்பான புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில நல்ல மனிதர்களுடன் இரவு நேரத்தை செலவிட்டேன் என்பது போன்று குறிப்பிட்டுள்ளார்.
Anushka Sharma 36th Birthday
இதே போன்று விராட் கோலி, நம்ப முடியாத உணவு அனுபவத்திற்கு நன்றி செஃப் மனு சந்திரா. நம் வாழ்வின் சிறந்த உணவு அனுபவங்களில் ஒன்றை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி என்றார்.
Anushka Sharma and Virat Kohli
மேலும், உன்னை சந்திக்கவில்லை என்றால் நான் என்னையே தொலைத்திருப்பேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே. நீங்கள் தான் எங்கள் உலகத்தின் வெளிச்சம். நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
IPL 2024, Royal Challengers Bengaluru
கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, 2021 ஆம் ஆண்டு வாமிகா பிறந்தாள். கடந்த பிப்ரவரி மாதம் 2ஆவதாக ஆண் குழந்தையான அகாய் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Royal Challengers Bengaluru
தற்போது விராட் கோலி ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் பிஸியாக விளையாடி வருகிறார். இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 10 போட்டிகளில் 3ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு என்பது இல்லை.
Anushka Sharma and Virat Kohli
பெங்களூரில் உள்ள செஃப் மனு சந்திராவின் கிளாசிக்கல் ஐரோப்பிய உணவகமான LUPAவில் அனுஷ்கா சர்மா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விராட் கோலி தனது ஆர்சிபி டீம்மேட்ஸ் உடன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.