கடந்த சில நாட்களாக தவெகவின் நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் இடையேயான வார்த்தை மோதல் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு சென்றுள்ளதால் பொதுமக்கள் தலையில் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் அக்கட்சியின் தலைவர் விஜய்யையும், அவரது கட்சியையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால் சீமானின் விமர்சனத்திற்கு துளி அளவும் செவி சாய்க்காத விஜய் தனது எதிரியை மட்டும் தான் விமர்சிப்பேன் என்ற ஒரே டிராக்கில் பயணித்து வருகிறார். இதனால் தற்போது சீமான் மட்டுமல்லாமல் நாதகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் விஜய், தவெக தொண்டர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக அண்மையில் தவெகவில் இணைந்த நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நாதகவின் சாட்டை துரைமுருகனால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். தொடக்கத்தில் நாகரிகமான முறையில் தொடங்கிய விவாதம் தற்போது காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு தரம் தாழ்ந்து சென்றுள்ளது.

Scroll to load tweet…

தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், “சாட்டை துரைமுருகன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் காளியம்மாளையே தூக்கி எறிந்துவிட்டனர். காளியம்மாளை காட்டிலும் சாட்டை ஒன்றும் பெரிய ஆள் இல்லை. ஆகவே சாட்டை துரைமுருகன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே போல் உங்கள் தலைவர் உங்கள் வீட்டுக்குள்ளும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Scroll to load tweet…

நாஞ்சில் சம்பத்தின் பேச்சால் உச்சக்கட்ட கோபமடைந்த சாட்டை துரைமுருகன், இவரை விமர்சித்தே 24 நிமிட வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “விஜய்யை தற்குறி என சொல்பவர்கள் தான் தற்குறி என்று சொல்கிறார். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் விஜய் ஒரு தற்குறி, அவன் ஒரு தவக்களை என்று பேசியிருந்தார். மேலும் கரூரில் 41 பேர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பினால், விஜய் ஒரு ஆட்கொண்ட தலைவன் என்பதால் அவரை பார்ப்பதற்காக தொண்டர்கள் வருகிறார்கள்.

நானும் ஒரு காலத்தில் கலைஞரின் கார் பின் ஓடியுள்ளேன் என்று சொல்கிறார். அப்படியென்றால் அன்று கலைஞர் கார் பின்னால் ஓடியவர் இன்று விஜய்யின் பேருந்து பின்னால் ஓடுகிறார். அப்படியென்றால் நாஞ்சில் சம்பத்தும் ஒரு தற்குறி தான். நாஞ்சில் சம்பத்துக்க மரியாதை கொடுத்தால் அது மரியாதைக்கே அவமரியாதையாகிவிடும்.

Scroll to load tweet…

மதிமுக, அதிமுக, சசிகலா, டிடிவி தினகரன், திமுக என பல கட்சிகளுக்கு மாறி வாயை வாடகைக்கு விட்டு பிழைத்தவர் நாஞ்சில் சம்பத் என கடுமையான வார்த்தைகளால் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.