- Home
- Tamil Nadu News
- திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்
திமுகவை நத்திப் பிழைப்பதற்காக தமிழக அரசியலில் குட்டிச் சுவராகிப் போன வைகோ, விஜய் என்ற கோபுரத்தின் மீது கல்லெறிகிறார். நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்
மதிமுக, திமுக, அதிமுக என தமிழகத்தின் பல்வேறு முன்னணி திராவிட கட்சிகளில் நட்சத்திர பேச்சாளராக பயணித்தவர் நஞ்சில் சம்பத். கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்த இவர் இனி இலக்கிய மேடைகளில் மட்டுமே என்னை பார்க்க முடியும் என்ற அதிரடியாக அறிவித்தார்.
அரசியல் குரு வைகோ
மேலும் அவர் அரசியலை விட்டு விலகிய காலத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அரசியலைத் தாண்டியும் என் வாழ்வில் முக்கியமானவர் வைகோ. 18 ஆண்டு காலம் அவரோடு பணியாற்றி இருக்கிறேன். கனவுகள் காணும் கால்சட்டை பருவத்திலேயே அவரை என் தலைவராகவும், குருநாதராகவும் நான் ஏற்றுக் கொண்டிருந்தேன்.
18 ஆண்டு பந்தம்
வைகோவின் துணிச்சல், அவருடைய ஆளுமை, அவருடைய விவாதத் திறமை, அவரின் பேச்சாற்றல், மனிதாபிமானம் உள்ளிட்டவை என்னை மிகவும் கவர்ந்தது. இந்திய துணைகண்ட அரசியல் வரலாற்றில் 9 பிரதமர்களை கேள்விகளால் திகைக்க வைத்த வைகோ நான் மிகவும் மதித்து போற்றும் தலைவர். காமராஜருக்கு பின்னர் தென் தமிழகத்தில் இருந்து ஒரு தலைவருடைய செல்வாக்கு வடபுலத்தில் இருந்தது என்றால் அந்த வரலாறு வைகோவுக்கு மட்டும் தான் சொந்தம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அரசியலில் குட்டிச் சுவராகிப் போன வைகோ
இந்நிலையில் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட நாஞ்சில் சம்பத் அண்மையில் தன்னை விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார். தமிழக அரசியலில் மிகந்த பேச்சாற்றல் கொண்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
திமுகவை நத்திப் பிழைப்பதற்காக தமிழக அரசியலில் குட்டிச் சுவராகிப் போன வைகோ, விஜய் என்ற கோபுரத்தின் மீது கல்லெறிகிறார். நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு..!
— Nanjil Sampath (@NanjilPSampath) December 11, 2025
முக்கிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் விஜய் மற்றம் தமிழக வெற்றி கழகத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் விஜய் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் வைகோவுக்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், “திமுகவை நத்திப் பிழைப்பதற்காக தமிழக அரசியலில் குட்டிச் சுவராகிப் போன வைகோ, விஜய் என்ற கோபுரத்தின் மீது கல்லெறிகிறார். நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாயைப் போல வாழலாம்
நாஞ்சில் சம்பத் போல வாழக்கூடாது!
நீ ஆறு வருடம் அந்த திமுகவைத்தானே நக்கிப்பிழைத்தாய் !
நக்குற நாய்க்கு செக்காவது சிவலிங்கமாவது . https://t.co/4it2CWQ41M— Duraimurugan (@Saattaidurai) December 11, 2025

