உன்ன விட பெரிய ஆளை எல்லாம் பாத்தாச்சு..! அமித் ஷாவுக்கு நேரடி சவால் விட்ட வைகோ
அமித்ஷா கர்வத்தோடும் அகந்தையோடும் திமுகவை துடைத்தெறிவோம் என்கிறார். இவரை விட பெரியவர்களாலயே திமுகவை அசைத்து பார்க்க முடியவில்லை. அமித்ஷா நாவடக்கத்துடன் பேச வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் வைகோ
மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் மதிமுக நிர்வாகியின் கடை திறப்பு விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், “திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் கடந்த 31 ஆண்டுகளாக மதிமுகவை நடத்தி வருகின்றேன். எனக்கு பக்கபலமாக எனது தம்பிகள் இருக்கின்றனர்.
நீதிபதி வரம்பு மீறி பேசக் கூடாது..
முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் பிரச்சினைகளுக்காக போராடினேன். நீதிபதி சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார். நான் நீதிபதிகளை மதிக்கக் கூடியவன் ஆனால் நீதிபதிகள் தங்கள் வரம்புக்குள் மட்டும் பேச வேண்டும். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சொல்லி மிரட்டுகிறார்.
அமித்ஷா நாவடக்கத்துடன் பேச வேண்டும்
திமுகவை வீழ்த்த வேண்டும் என முயற்சிகள் நடைபெற்று வரகின்றன. திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. திமுகவை உடைத்து, துடைத்தெரிவோம் என அமித்ஷா பேசுகிறார். அமித்ஷாவை விட 100 மடங்கு பலம் வாய்ந்தவர்களை திமுக எதிர் கொண்டுள்ளது. கட்சிகளை விமர்சித்து பேசும் போது அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களுக்க சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து நாட்டை துண்டாட நினைக்கிறது. மேலும் இந்தியாவுக்கு பாரத் என பெயர் சூட்ட பாஜக முயற்சி செய்து வருகிதுறது“ என்று தெரிவித்துள்ளார்.

