Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாள்.. தடையை மீறிய மக்கள்.. மீண்டும் Red Zoneல் தலைநகர் - மேலும் இரு முக்கிய நகரங்களில் காற்று மாசு!

Delhi Air Pollution : கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகம் இல்லாத ஒரு தீபாவளி திருநாளை டெல்லி மக்கள் கொண்டாடினர். ஆனால் அவர்களின் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை என்று தான் கூறவேண்டும். 

air pollution delhi back to red zone two more indian cities joined top 10 list ans
Author
First Published Nov 13, 2023, 5:56 PM IST | Last Updated Nov 13, 2023, 5:56 PM IST

தடையை மீறி பலர் தீபாவளிக்காக பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய நிலையில், மீண்டும் டெல்லி மாநகரம் காற்று மாசில் ரெட் சோனிற்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை காலை மாசுபாட்டின் உலகின் மிக மோசமான 10 நகரங்களில் இரண்டு இந்திய நகரங்கள் புது தில்லியோடு இணைந்தன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடிக்கடி உலக அளவில் மாசு நிறைந்த நகரத்தின் பட்டியலில் முதலிடம் பிடித்து வரும் டெல்லி நகரம், சுவிஸ் குழுவான IQAir அளித்த தகவலின்படி, 420 AQI என்ற அபாயகரமான தரக் குறியீடு (AQI) எண்ணிக்கையைக் கொண்டிருந்தது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார். தடையை மீறி பலர் பட்டாசுகளை வெடித்தது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் பெரிய முன்னெடுப்பு - PM PVTG வளர்ச்சி பணியை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

ஆனால் இந்த முறை உலகின் மாசுபட்ட டாப் 10 நகரங்களில் டெல்லியோடு இரு முக்கிய இந்திய நகரங்கள் இனைந்துள்ளது. 196 AQI உடன் நான்காவது இடத்தைப் பிடித்த கொல்கத்தா முதல் 10 இடங்களுக்குள் இணைந்தது, அதே நேரத்தில் இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பை 163 AQI உடன் எட்டாவது இடத்தில் உள்ளது. 

AQI அளவு 400-500 ஆகியவற்றுக்கு இடையில் இருக்கும்போது ஆரோக்கியமான மக்களை பாதிக்கிறது மற்றும் ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஆபத்தாகிறது. அதே சமயம் 150-200 அளவு ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை தருகிறது. 0-50 என்ற நிலைகள் நல்லதாகக் கருதப்படுகிறது.

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட மெய்தீ ஆதரவு அமைப்புகளுக்கு தடை: உள்துறை அமைச்சகம் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் புது தில்லியில் ஒரு தடிமனான புகைமூட்டம் பரவத் தொடங்கியது, நள்ளிரவுக்குப் பிறகு அதன் AQI 680க்கு அதிகமான, அதி ஆபத்தான நிலைக்கு சென்றது. ஒவ்வொரு ஆண்டும் தலைநகரில் பட்டாசு வெடிப்பதற்கு அதிகாரிகள் தடை விதிக்கின்றனர், ஆனால் அரிதாகவே அந்தத் தடைகள் அமல்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios