Asianet News TamilAsianet News Tamil

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட மெய்தீ ஆதரவு அமைப்புகளுக்கு தடை: உள்துறை அமைச்சகம் உத்தரவு

இந்த மெய்தீ ஆதரவு அமைப்புகள் பிரிவினைவாத, நாசகார, பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருப்பதால் தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்று அறிவிப்பில் கூறப்படுகிறது. 

Home ministry bans several Meitei extremist organisations in Manipur amid ethnic violence sgb
Author
First Published Nov 13, 2023, 5:51 PM IST | Last Updated Nov 13, 2023, 6:00 PM IST

மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) திங்களன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் பல மெய்தீ ஆதர்வு அமைப்புகளை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவு திங்கள்கிழமை (நவம்பர் 13, 2023) முதலே நடைமுறைக்கு வருவதாகவும் ஐந்தாண்டு காலத்திற்கு இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை ராணுவம் (PLA) மற்றும் அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA), மக்கள் புரட்சிகரக் கட்சி காங்க்லீபாக் (PREPAK) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான ‘ரெட் ஆர்மீ’ (Red Army), காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (KPC) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான ‘ரெட் ஆர்மீ’ (Red Army) ஆகிய மெய்தீ ஆதரவு அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அயோத்தியில் ஒரு அற்புதமான நாள்! வைரலாகும் பிரதமர் மோடி பகிர்ந்த தீபாவளி புகைப்படங்கள்!

Home ministry bans several Meitei extremist organisations in Manipur amid ethnic violence sgb

மேலும், காங்லீ யாயோல் கன்பா லுப் (KYKL), ஒருங்கிணைப்புக் குழு (CorCom), சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி காங்லீபக் (ASUK) ஆகிய அமைப்புகளும் இந்த உத்தரவின் கீழ் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்படிருக்கின்றன. இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய அனைத்து பிரிவுகளுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மெய்தீ ஆதரவு அமைப்புகள் பிரிவினைவாத, நாசகார, பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருப்பதால் தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்று அறிவிப்பில் கூறப்படுகிறது. இந்த அமைப்புகள் மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 7 மெசேஜ் வந்தால் உஷாரா இருக்கணும்! தப்பித் தவறி கிளிக் செய்தால் ஆபத்து உறுதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios