இந்த 7 மெசேஜ் வந்தால் உஷாரா இருக்கணும்! தப்பித் தவறி கிளிக் செய்தால் ஆபத்து உறுதி!
சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வழக்கமாக மோசடி பேர்வழிகள் அனுப்பும் போலி மெசேஜ்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். இந்தத் தொகுப்பில் ஆன்லைன் மோசடியில் அதிகம் பயன்படுத்தப்படும் 7 விதமான போலி மெசேஜ்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
பரிசு அறிவிப்பு
"நீங்கள் ஒரு பரிசை வென்றிருக்கிறீர்கள்!" என்பது போன்ற செய்தியுடன் ஏதேனும் மெசேஜ் வரலாம். இது மாதிரி வரும் மெசேஜ்களில் பெரும்பாலானவை மோசடியானவை தான். இதில் 99%பணத்தை திருடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
போலியான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் அல்லது சலுகைகள்
வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை எந்த நிறுவனமும் வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பாது. அப்படி வந்தால், அது நிச்சயம் மோசடியானதாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
வங்கி எச்சரிக்கை
சில மெசேஜில் வங்கிக் கணக்கில் KYC விவரங்களைப் பூர்த்தி செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுமாறு கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற வங்கி எச்சரிக்கை செய்திகள் அனைத்தும் பணம் திருடுவதை நோக்கமாகக் கொண்டவைதான்.
வாங்காத பொருளுக்கு ஆர்டர் அப்டேட்
ஏதாவது பொருளைப் பற்றிய ஆர்டர் அப்டேட் மெசேஜ் வரும். நீங்கள் அந்தப் பொருளை வாங்கவே இல்லை என்றால், அது உறுதியாக மோசடிப் பேர்வழிகள் அனுப்பியதுதான். அத்தகைய செய்திகளில் உள்ள லிங்க் எதையும் தவறியும் கிளிக் செய்துவிடக்கூடாது. கிளிக் செய்துவிட்டால், அதன் மூலம் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாம்.
ஓடிடி சலுகைகள்
OTT பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் அதையும் மோசடிக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். Netflix போன்ற OTT தளங்களின் சந்தா குறித்த செய்தி அனுப்புவது போல மோசடி வலையில் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். இதுபோன்ற மெசேஜ்களில் இலவச சலுகைகளைப் பெற அல்லது சந்தாவைப் புதுப்பிக்க என்று சொல்லி வில்லங்கமான லிங்க் ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்யவே கூடாது.
மிஸ்டு கால் அலர்ட்
போலியான மிஸ்டு கால் அலர்ட் அல்லது டெலிவரி சிக்கல்கள் பற்றிய மெசேஜ் வந்தால் அவை ஆபத்தானவை. இவற்றைப் பொருட்படுத்தாமல் தவிர்த்துவிடுவதே நல்லது.
அமேசான் மெசேஜ்
அமேசான் பாதுகாப்பு எச்சரிக்கை அல்லது அமேசான் கணக்கை அப்டேட் செய்யுங்கள் என்று மெசேஜ் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஆன்லைன் விற்பனை நிறுவனமும் இதைப்போன்ற முக்கியமான செய்திகளை SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் நினைவூட்டுவது இல்லை.