ஜனவரி 4 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் 35 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இதில் சட்டப்பேரவை தொடரில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:38 PM (IST) Dec 20
டிசம்பர் 24ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
10:12 PM (IST) Dec 20
திராவிட இயக்கங்கள் 70 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக அண்ணாமலை கூறி வருகிறார். கண்ணாடி கூண்டில் இருந்து அண்ணாமலை கல் ஏரியக்கூடாது என்று கூறியுள்ளார் துரை வைகோ.
09:40 PM (IST) Dec 20
உலகக் கோப்பை நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சராசரி விற்பனையை விட, மது விற்பனை அதிகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
08:22 PM (IST) Dec 20
யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ 10,000 கோடி பங்களித்து உள்ளார்கள் என்று ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.
07:41 PM (IST) Dec 20
முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் அண்ணாமலை.
06:53 PM (IST) Dec 20
18 வயது மகள் தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
05:25 PM (IST) Dec 20
அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
04:03 PM (IST) Dec 20
கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
03:33 PM (IST) Dec 20
நடிகர் சிபி சந்திரனுக்கு அஜித் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள சிபி, அந்த பரிசை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிபியின் இந்த பதிவுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க
02:58 PM (IST) Dec 20
இந்த நாள் விஜய் அண்ணாவுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ரொம்பவே எமோஷனலான நாளாக இருக்க போகிறது. soul of varisu பாடல் கேட்டதுக்கு அப்புறம் கண்டிப்பாக எல்லாருமே உங்க அம்மாவுக்கு கால் பண்ணுவீங்க. பாடலாசிரியர் விவேக், அவரது பாடல் வரிகள் மூலமாக என்மனதை பலமுறை அழவைத்துவிட்டீர்கள். இயக்குனர் வம்சி லவ் யூ என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார் தமன். மேலும் படிக்க
02:13 PM (IST) Dec 20
அண்ணா தி.மு.க மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 27-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் காலை 10 மணிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
02:07 PM (IST) Dec 20
டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரி வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
01:48 PM (IST) Dec 20
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனுமதியின்றி கூடி பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 10 பேர் மீது தாந்தோணி மலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
01:37 PM (IST) Dec 20
சினிமா பிரபலங்களின் சம்பளம் தற்போது ரூ.100 கோடியை கடந்து சென்றுவிட்டன. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:31 PM (IST) Dec 20
அண்ணாமலை சொத்து விவரங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை வெளியிட்டு பேரணியாக செல்ல வேண்டிய அவசியம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா என கேட்டுக்கொண்டுள்ளார்.
12:46 PM (IST) Dec 20
ஒவ்வொரு ஆண்டும் இறுதியாக வரும் பண்டிகை கிறிஸ்துமஸ் தான். இதனால் தீபாவளி, பொங்கல் போல் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையிலும் பெரிய நடிகர், நடிகைகளின் படங்கள் ரிலீசாகும். அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி-யில் ரிலீசாகும் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:42 AM (IST) Dec 20
விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் வகையில் செயல்பட்டதாகவும், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க..
11:16 AM (IST) Dec 20
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
10:56 AM (IST) Dec 20
அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த மாணவனை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு ஆசிரியர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
10:55 AM (IST) Dec 20
சென்னை திருவொற்றியூர் எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). இவர் ஆர். கே. நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ. படித்து வருகிறார். இவருக்கும் பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
10:41 AM (IST) Dec 20
வழக்குகளைப் பற்றியெல்லாம் தான் கவலைப்படவில்லை என்றும், அதெல்லாம் துணிக்கடைக்கு போய் கட்டப்பை வாங்கிட்டு வர்ற மாதிரினு TTF வாசன் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
10:04 AM (IST) Dec 20
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்சிற்கான ரசீதை வெளியிடக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விட்டிருந்த நிலையில் அந்த வாட்ச் கர்நாடகவாவை சேர்ந்த காபி கடை உரிமையாளரின் பெயரில் இருப்பதாக திமுக நிர்வாகி தெரிவத்துள்ளார்.
09:34 AM (IST) Dec 20
கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்க்க ஹாலிவுட் ஹீரோயின் போல் செம்ம மாஸாக வந்திருந்த நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் படிக்க
09:04 AM (IST) Dec 20
சென்னையில் திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
08:54 AM (IST) Dec 20
துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா, தற்போது தான் முதன்முறையாக கார் ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
08:21 AM (IST) Dec 20
கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தின் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
08:10 AM (IST) Dec 20
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து செல்போன் கடை உரிமையாளரின் வீடு மற்றும் கடையில் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடிவந்த நிலையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
மேலும் படிக்க..
07:44 AM (IST) Dec 20
போன் செய்தால் எடுக்க இவ்வளவு நேரமா? என தாய் கண்டித்ததால் கோபத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:16 AM (IST) Dec 20
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆண்டுதோறும் அததிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் சென்றுவர மானியத் தொகை அறிவித்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்களை அனைவரையும் பிற்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.