கோடை விடுமுறையை யொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படுவதை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்ற வெள்ளி கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஒழுங்கு படுத்தும் முயற்சியாக இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டு இ பாஸ் இருந்தால் மட்டுமே ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் 10 - 05 - 2024 (வெள்ளிக் கிழமை) அன்று 126வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
கோவையில் தொழில் அதிபரிடம் ரூ.300 கோடி மோசடி; 140 சவரன் நகை, ரூ.100 கோடி ஆவணங்கள் பறிமுதல்
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிடப்பட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
வனப்பகுதியில் கடும் வறட்சி; மீண்டும் ஊருக்குள் வந்து வாகனங்களை விரட்டிய பாகுபலி யானை
மேற்கண்ட 10 - 05 - 2024 விடுமுறை நாளினை ஈடுசெய்ய எதிர்வரும் 18 - 05 - 2024 (சனி்கிழமை) அன்று இம்மாவட்டத்திற்கு பணி நாளாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தெரிவித்துள்ளார்.