ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையிலும், குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா பகுதிக்கும் சென்று வரும் வகையிலும் போக்குவரத்துக் கழகம் சார்பில் சர்க்கீயூட் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம். இது போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக, சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணித்து அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சர்க்கீயூட் பஸ் சேவை துவக்கப்படும்.
undefined
இதன் மூலம் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. அதேபோல், பூங்கா மற்றும் படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கப்படும். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், சர்க்கீயூட் பஸ் சேவையை போக்குவரத்து கழகம் துவக்கியது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக இஸ்லாமியர் மீது பொய் புகார்; இந்து முன்னணி பிரமுகர் கைது
தாவரவியல் பூங்காவில் இருந்து படகு இல்லம், டீ பார்க் என சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் தற்போது சர்க்கீயூட் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், போக்குவரத்துத் துறையின் இந்த நடவடிக்கையால் நாங்கள் குறைந்த கட்டணத்தில் பல பகுதிகளுக்கு சென்று வர வசதியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.