வனவிலங்கு வேட்டை; 3 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் - பழனிசாமியின் நெருங்கிய நண்பருக்கு போலீஸ் வலை

By Velmurugan s  |  First Published Apr 24, 2024, 11:37 AM IST

நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அதிமுக வர்த்தக அணி செயலாளர் சஜீவனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வன விலங்கினை வேட்டையாடிய குற்ற வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு சகோதரர்களின் அண்ணனாக வளம் வரும் அதிமுக வர்த்தக அணி மாநிலச் செயலாளர் சஜீவன் மற்றும் 5 பேர் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வழக்கு பதிவு. துப்பாக்கிகள் பறிமுதல், சஜீவன் தலை மறைவு. வனத்துறையினர் தனிக்குழு அமைத்து  தேடும் பணி தீவிரம்

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் இந்தியாவிலேயே அதிகமான புலிகள், யானைகள், காட்டெருமைகள், சிறுத்தை புலி, கரடி, அரியவகை சிங்கவால் குரங்கு, நட்சத்திர  ஆமைகள், மான் இனங்கள் உட்பட தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. 

Latest Videos

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; தாலிகட்டிக் கொண்டு திருநங்கைகள் இரவு முழுவதும் நடனமாடி உற்சாகம்

இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சில்வர் கிளவுட் தோட்டத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதாக அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளரும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனில் மற்றும் சிபி அவர்களின் அண்ணனாக உள்ள சஜீவனுக்கு சொந்தமான குடியிருப்பில் பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவனின்  குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் சோதனை நடத்திய போது வீட்டு வாசலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் சஜீவன் தங்கும் அறையில் மேலும் ஒரு துப்பாக்கி, 11 தோட்டாக்கள், கத்திகள், ரத்தக்கரை படிந்த கோடாரி, டார்ச் லைட்டுகள் மற்றும் காற்று சுழல் துப்பாக்கி ஒன்று வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. 

பாஜக கூட்டணியை வீழ்த்த திமுகவும் எடப்பாடியும் கள்ள உறவு.! அதிமுக 3வது இடமே பிடிக்கும்- டிடிவி தினகரன் அதிரடி

இது குறித்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவனின் எஸ்டேட் மேலாளரை விசாரணை நடத்திய போது சஜீவன்  மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சுப்பையா மற்றும் அவரது நண்பர்கள் துப்பாக்கியுடன் எஸ்டர்ட்க்கு வந்து வேட்டையாடுவது வழக்கம் என வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் வனத்துறையினர் குற்றச் செயலில் ஈடுபட்ட பைசல், சாபுஜாக்கோப், பரமன், ஸ்ரீகுமார், சுபைர், அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளருமான சஜீவன் உட்பட மூன்று பேர் தலைமறைவாகினர். இந்நிலையில் பைசல், சாகுஜேக்கப், பரமன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் உட்பட மேலும் இருவரை வனத்துறையினர் தனிக்குழு அமைத்து தேடி வருகின்றனர். சஜீவன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!