Koovagam: கூத்தாண்டவர் கோவில் திருவிழா; தாலிகட்டிக் கொண்டு திருநங்கைகள் இரவு முழுவதும் நடனமாடி உற்சாகம்

உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா  பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி கொண்டாட்டம்.

koothandavar temple chithirai festival thousands of transgender participated in kallakurichi district vel

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா  மாரியம்மன் கோயில் அருகில் கடந்த 9ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் கூவாகம் மற்றும் சுற்றியுள்ள வேலூர், தொட்டி, சிவிலியாங்குளம், பந்தலடி உள்ளிட்ட கிராமக்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கொண்டு வந்த கூழ் குடங்களை வைத்து படையல் இடப்பட்டது. 

VAO Suicide: திருமணமாகாத விரக்தியில் VAO தற்கொலை? கோவையில் பரபரப்பு

பின்னர் படையலிடப்பட்ட கூழ் பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சித்திரை பெருவிழாவின்  முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி  நேற்று மாலை சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில்  இருந்து வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக்  கொண்டு கோயில் அருகில் கற்பூரங்களை ஏற்றி அரவானில் பெருமைகளை கூறி கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 

Murder: கணவருடன் சண்டை; தாய் வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு 5 வயது சிறுவனால் நேர்ந்த கொடூரம் - சேலத்தில் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து இன்று காலை சித்திரை தேரோட்டம்  நடைபெறுகிறது. இந்தத் தேர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பந்தலடிக்கு செல்லும். அங்கு அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்ச்சியோடு இருந்த திருநங்கைகள் அரவான் களப்பணிக்குப் பிறகு பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து தலைமுழுகி வெள்ளை புடவை உடுத்தி வளையல்களை உடைத்தும், ஒப்பாரி வைத்து அழுது சோகமாக வீடு திரும்புவார்கள். 

இதனைத் தொடர்ந்து நாளை விடையாத்தியும்,  26 ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. கோடை வெயிலின் தாக்கம் எதிரொலியாக வயதான திருநங்கைகள் மிகவும் சிரமப்பட்டு வந்து கூத்தாண்டர் கோயிலுக்கு சென்று தாலி கட்டிக்கொண்டு வழிபட்டனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios