MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நீலகிரி
  • குட்டி காஷ்மீராய் மாறிய உதகை.. பொதுமக்களை கதறவிடும் உறைபனி.. சிலாகிக்கும் டூரிஸ்ட்.. வைரலாகும் போட்டோ

குட்டி காஷ்மீராய் மாறிய உதகை.. பொதுமக்களை கதறவிடும் உறைபனி.. சிலாகிக்கும் டூரிஸ்ட்.. வைரலாகும் போட்டோ

நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவி, வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் உதகை பகுதிகள் குட்டி காஷ்மீர் போல காட்சியளிக்கிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 05 2026, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் கடும் பனிபொழிவு
Image Credit : Asianet News

தமிழகத்தில் கடும் பனிபொழிவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவு அடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிபொழிவும் ஒரு சில இடங்களில் நீர்பனி மற்றும் உறைபனியும் நிலவுகிறது. அதாவது நீர்பனி தொடங்கிய அடுத்த ஒரு சில வாரங்களில் உறைப்பனி தொடங்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி கடும் உறைபனி நிலவி வருகிறது.

24
நீலகிரியில் உறைபனி
Image Credit : Asianet News

நீலகிரியில் உறைபனி

நீலகிரி மாவட்டத்தில் தலைகுந்தா, காந்தல், உதகை உள்ளிட்ட பகுதிகளில் நிலவிவரும் உறைபனி பொழிவால் அப்பகுதிகள் குட்டி காஷ்மீர் போல் மாறி கடும் குளிர் நிலவுகிறது. இப்பகுதிகளில் ஜூரோ டிகிரி செல்சியஸாக குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஊட்டியின் பல்வேறு பகுதிகள் காஷ்மீரை நினைவூட்டும் வகையில் பனிகள் படர்ந்து வெண்மை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

Related Articles

Related image1
குரூப்-4 தேர்வர்கள்! நாள் குறித்த டிஎன்பிஎஸ்சி! வெளியானது முக்கிய அறிவிப்பு!
Related image2
அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்கள் கொண்டாட்டம்! போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்
34
குவியும் சுற்றுலா பயணிகள்
Image Credit : Asianet News

குவியும் சுற்றுலா பயணிகள்

குறிப்பாக ஊட்டி குதிரைப் பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்களில் உறைபனி படிந்து, எப்போதும் பச்சைப்பசேலென காட்சியளிக்கும் புற்கள் தற்போது வெள்ளை கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளிக்கின்றன. இந்த அபூர்வ காட்சியைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்களின் மீது உறைபனி படிந்து அவையும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

44
தீவனம் தட்டுப்பாடு அபாயம்
Image Credit : Asianet News

தீவனம் தட்டுப்பாடு அபாயம்

மேலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தொழிலாளர்கள் குளிரைத் தாங்கும் ஆடைகளை அணிந்து உறைபனிக்கிடையிலும் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர். இதேபோல் மார்க்கெட் பகுதிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். உறைபனி தாக்கத்தால் செடி, கொடி மற்றும் புற்கள் காய்ந்து வறட்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் கால்நடைகளுக்குப் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?
Recommended image2
School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
Recommended image3
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!
Related Stories
Recommended image1
குரூப்-4 தேர்வர்கள்! நாள் குறித்த டிஎன்பிஎஸ்சி! வெளியானது முக்கிய அறிவிப்பு!
Recommended image2
அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்கள் கொண்டாட்டம்! போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved