முதுமலையில் கடும் வறட்சி; 100 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம் - விலங்குகள் இடப்பெயர்வு

By Velmurugan s  |  First Published Apr 30, 2024, 6:14 PM IST

முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் கடும் வறச்சியின் காரணமாக சீகூர் முதல் பெள்ளிக்கள்  வரை உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது.


மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு போதிய மழைப் பொழிவு இல்லாததால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.

விவசாயம் செழிக்க வேண்டி 500 ஆடுகள், 300 கோழிகளை பலியிடும் பிரமாண்ட திருவிழா; திண்டுக்கல்லில் கோலாகலம்

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் உள்ள சீகூர் முதல் பெள்ளிக்கள் வரை உள்ள வனப்பகுதியில் நேற்று பிற்பகல் முதல் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த கடும் காட்டுத் தீயால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் வனப்பகுதியில் உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து சம்பலாகி வருகின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதையல் எனக்கூறி பானையில் மண்ணை வைத்து ரூ.7.5 லட்சம் மோசடி; சேலத்தில் போலி சாமியார்கள் கைது

காட்டுத்தீ காரணமாக யானை, புலி போன்ற வனவிலங்குகள் அப்பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளன. மளமளவென எரிந்து வரும் காட்டு தீயை மேலும் பரவாமல் தடுக்க எதிர் தீயை மூட்டி கட்டுப்படுத்தும் பணியில் வன துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

click me!