Asianet News TamilAsianet News Tamil

விவசாயம் செழிக்க வேண்டி 500 ஆடுகள், 300 கோழிகளை பலியிடும் பிரமாண்ட திருவிழா; திண்டுக்கல்லில் கோலாகலம்

பழனி அருகே கோவில் திருவிழாவில் 500 ஆட்டு கிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதான விருந்து நடைபெற்றது.

nearly 500 goats and 300 Cocks served to thousands of devotees at temple festival in dindigul vel
Author
First Published Apr 30, 2024, 6:01 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோவில். பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பெரியதுரையான்  கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்றது. 

புதையல் எனக்கூறி பானையில் மண்ணை வைத்து ரூ.7.5 லட்சம் மோசடி; சேலத்தில் போலி சாமியார்கள் கைது

திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாய்கள் மற்றும் 300 கோழிகள் கருப்பணசாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணி முதல் கிடாய் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டன. பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு  வெட்டப்பட்ட ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை, இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவிலான பாத்திரங்களை பயன்டுத்தி  உணவுகள் தயார் செய்யப்பட்டன. 

Viral Video: மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதை ஆசாமி வெறியாட்டம்; உயிர் பயத்தில் மருத்துவர், செவிலியர்கள்

இன்று மதியம் சமைக்கப்பட்ட உணவகளை, பெரியதுரையான் கருப்பசாமி கங்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துகின்றனர். பெரியதுரையான் கோவிலில் விவசாயிகள் வளர்த்து கிடாய் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios