கோவையில் தொழில் அதிபரிடம் ரூ.300 கோடி மோசடி; 140 சவரன் நகை, ரூ.100 கோடி ஆவணங்கள் பறிமுதல்

கோவையில் தொழில் அதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து சுமார் 12 கோடி பணம், 140 சவரன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

300 crore cheating case nearly 100 crore worth document and 140 sovereign jewellery seized by investigation officers in coimbatore vel

கோவையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும், 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.

வனப்பகுதியில் கடும் வறட்சி; மீண்டும் ஊருக்குள் வந்து வாகனங்களை விரட்டிய பாகுபலி யானை

மோசடி செய்ததை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மோசடியில் ஈடுபட்ட வசந்த், சிவகுமார், ஷீலா, தீக்ஷா, சக்தி சுந்தர் என மொத்தம் ஐந்து நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

எம்எல்ஏ, எம்.பி.களின் பெயரை சொல்லி தொழிலதிபர்களிடம் வசூல் வேட்டை; சைபர் கிரைம் போலீஸ் அதிரடி

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர், இன்று குற்றவாளிகளிடம் இருந்து சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றி, வங்கி கணக்குகளை முடக்கம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நீதிமன்றத்தில் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்து மீண்டும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios