கொலையாளியை பிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்; திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தவர்களால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published May 8, 2024, 6:13 PM IST

நிலக்கோட்டை அருகே கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில்  கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் வீட்டின் முன்பு படுத்து உறங்கிய கூலி தொழிலாளியை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நடுப்பட்டி பொது மக்கள்  நிலக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கொலை செய்யப்பட்ட ஆண்டானின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நடுப்பட்டி, கரியாம்பட்டி பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

கோவையில் தொழில் அதிபரிடம் ரூ.300 கோடி மோசடி; 140 சவரன் நகை, ரூ.100 கோடி ஆவணங்கள் பறிமுதல்

இதனிடையே தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பிலும், கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பிலும் இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

வனப்பகுதியில் கடும் வறட்சி; மீண்டும் ஊருக்குள் வந்து வாகனங்களை விரட்டிய பாகுபலி யானை

அதில் கூலி தொழிலாளி ஆண்டானை படுகொலை செய்த மர்ம கும்பலைச் சேர்ந்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆண்டான் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வருவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

click me!