ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.. ஆன்லைனில் பெறுவது எப்படி? சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை!

By Raghupati RFirst Published May 5, 2024, 9:13 PM IST
Highlights

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாஸ் பெறுவது எப்படி, சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய விதிமுறைகள் பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வருவதால் கடும் போக்குவரது நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல 7ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதற்கு அங்குள்ள ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.  இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளிமாநிலம் / வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 07\/05/ 2024 அன்று முதல் 30/ 06 / 2024 வரை இ- பாஸ் பதிவு செய்து வர வேண்டும். 

சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பூங்கொடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், epass.tnega.org இணையதளம் வாயிலாக இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய்யலாம் என நீலகிரி கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே பொதுமக்கள் நாளை முதல் இந்த இணையதள முகவரி மூலம் இ-பாஸ் முன்பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பேருந்து மூலம் வருவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

click me!