தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக.வினர் இடையே மோதல்; ஆள விடுங்கடா சாமி என எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர்

By Velmurugan s  |  First Published May 1, 2024, 6:27 PM IST

பழனியில் அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து முற்றுகையிட்ட அதிமுக பிரமுகர்கள். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு. 


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிமுக சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நீர், மோர் பந்தல் திறக்கும் விழா அதிமுக துணை பொது செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது. 

மனைவி வேண்டுமா? தவணையை செலுத்திவிட்டு கூட்டீட்டு போ; சேலத்தில் தனியார் வங்கி அடாவடி

Tap to resize

Latest Videos

undefined

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நத்தம் விஸ்வநாதன் தனது காரில் புறப்பட்ட போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன் காரை முற்றுகையிட்டு ஒருவரை ஒருவர் குறை கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மே தினத்தை முன்னிட்டு 1 ரூபாய்க்கு டீ; உழைப்பாளர்களை கௌரவிக்கும் தனியார் தேனீர் கடை உரிமையாளர்

பின்னர் அவர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தகாத வார்த்தைகளை கூறிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிச் சென்றார். பழனி அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் குறித்து தவறான தகவலை அதிமுக பிரமுகர் ஒருவரே தனது நண்பர் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பியதால் இக் குழப்பம் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

click me!