தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மகன் கீர்த்திக் (23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். 

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தின் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மகன் கீர்த்திக் (23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து நண்பர்கள் செந்தில்குமார் (24), அஜய் (23), அருண்குமார் (21), விக்னேஷ் (23) ஆகியோருடன் காரில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். காரை கீர்த்திக் ஓட்டினார்.

இதையும் படிங்க;- தடுப்பு சுவரில் மோதல்! சினிமா பாணியில் கார் கதவில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐடி பெண் ஊழியர் பலி..!

கோவில்பட்டி அருகே அய்யனேரி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, எதிரே தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காரும் பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் அஜய், கீர்த்திக், செந்தில்குமார் ஆகியோர் காரில் அமர்ந்த படியே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இந்த விபத்தை கண்ட அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்‌ஷேசும் உயிரிழந்தார். இதனால், விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- தஞ்சையில் பயங்கரம்! கண்ணிமைக்கும் நேரத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்! இரண்டு திமுக முக்கிய நிர்வாகிகள் பலி