தஞ்சையில் பயங்கரம்! கண்ணிமைக்கும் நேரத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்! இரண்டு திமுக முக்கிய நிர்வாகிகள் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்துகொண்டிருந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் நேற்று மதியம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
தஞ்சை அருகே எதிர்பாராத விதமாக இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்துகொண்டிருந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் நேற்று மதியம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், இரண்டு கார்களின் முன்பகுதி அப்பளம் நொறுங்கின.
இதையும் படிங்க;- வளைவில் வேகமாக திரும்பிய போது பள்ளத்தில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து! அலறிய பயணிகள்! யாருக்கு என்ன ஆச்சு.!
உடனே இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரித்த போது தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த முகமது சுல்தான் என்பவரின் மகன் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சேட் முகமது (60), ஊரணிபுரம் காமராஜ் நகரை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் திமுக நகர செயலாளர் சஞ்சய் காந்தி (45) என்பதும் தெரிய வந்தது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- திமுகவுக்கு ஒன்னு மட்டும் சொல்றேன்! அம்மா சொல்லை வேண்டுமானால் நீங்க நீக்கிவிடலாம்.. ஆனால்.. சசிகலா ஆவேசம்.!