வளைவில் வேகமாக திரும்பிய போது பள்ளத்தில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து! அலறிய பயணிகள்! யாருக்கு என்ன ஆச்சு.!
பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி அரசு சொகுசு பேருந்து வந்துக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். பேருந்து திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது வளைவில் திரும்ப முயன்றது.
பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி அரசு சொகுசு பேருந்து வந்துக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். பேருந்து திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது வளைவில் திரும்ப முயன்றது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உடனே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து, காயமடைந்ததவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.