வாட்ச் பில்லை வெளியிட அண்ணாமலை தயங்குவது ஏன்.? கர்நாடக காபி கடை உரிமையாளர் பெயரில் ரசீதா.? திமுக கேள்வி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்சிற்கான ரசீதை வெளியிடக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விட்டிருந்த நிலையில் அந்த வாட்ச் கர்நாடகவாவை சேர்ந்த காபி கடை உரிமையாளரின் பெயரில் இருப்பதாக திமுக நிர்வாகி தெரிவத்துள்ளார்.
ரபேல் வாட்ச் பில் எங்கே.?
திமுக- பாஜக இடையே தொடர் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் தொடர்பாக சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. இதற்க்கு பதில அளித்த அண்ணாமலை இந்த வாட்ச் ரபேல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் ஆடு மட்டுமே எனது சொத்து என கூறிவரும் அண்ணாமலை 5லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கியது எப்படி என கேள்வி எழுப்பியிருந்தார்.
இப்போ புகழ்ந்தது பல்வளத்துறை அமைச்சர்; அடுத்தது என்ன மின்துறை அமைச்சரா? அண்ணாமலை கேள்வி!!
செந்தில்-பாலாஜி அண்ணாமலை மோதல்
மேலும் அந்த வாட்சிற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட தயாரா என சவால் விடுத்திருந்தார். இதற்க்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜக மாநில தலைவராக ஆவதற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டு வாங்கியதென்றும், எனது சொத்து ஆவணங்களை வெளியிட தயாராக இருப்பதாகவும், அதே போல திமுக தலைவர்கள் தங்களது சொத்துக்களை வெளியிட முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து மீண்டும் இதற்க்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
லஞ்சம் கொடுக்கப்பட்டதா வாட்ச்
இந்தநிலையில் திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடிகாரம் வாங்கிய ரசீதை வெளீயிட அண்ணாமலை தயங்க காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016தாம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி பெயரில் உள்ளதாம்! தேர்தல் அபிடவிட்டில் ஏன் சொல்ல? அதையும் தாண்டி ஏன் அந்த நிறுவனம் கர்நாடக சிங்கத்துக்கு லஞ்சம் கொடுத்தது! என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்